பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

201

சம்பந்தமான “சையன்ஸ்” நூல்களை முதல்முதல் தமிழில் வெளிப் படுத்தியவர் இவர்தாம். இதன் பொருட்டுத் தமிழுலகம் இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது.

1856-இல் கிறீன் வைத்தியர் வைத்திய நூல் ஒன்றைத் தமிழில் எழுதி அதனை அச்சிடும் செலவை அரசாங்கத்தாரை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டார். அரசாங்கத்தார், அந்த நூலை ஆங்கில மொழியில் எழுதினால் தமது செலவில் அச்சிடுவதாகத் தெரிவித் தார்கள். அமெரிக்க மிஷன் சங்கத்தின் நோக்கம் எல்லா சையன்ஸ் களையும் சாத்திரங்களையும் தேசபாஷையில் எழுதப்படவேண்டும் என்பதாகையால் கிறீன் வைத்தியர் அந்த வைத்திய நூலை ஆங்கிலத்தில் எழுத மறுத்துவிட்டார். ஆகையால், அரசாங்கத்தார் அந்த நூலை அச்சிடுவதற்குப் பொருளுதவி செய்ய முடியாதென்று சொல்லிவிட்டார்கள். கிறீன் வைத்தியர் தமிழ்மொழியில் இயற்றிய வைத்திய சம்பந்தமான நூல்கள்:

அங்காதிபாதம் (Human Anatomy), சுகரணவாதம், உற்பாலனம். இம் மூன்று நூல்களும் ஒரே புத்தகமாக 1872-இல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டன. கெமிஸ்தம் (Chemistry) “இது வெல்சு பண்டிதர் இங்கிலீஷில் இயற்றிய நூலிலிருந்து, பாஷாந்தர மாக்கலில் த.வி. சப்மன் வைத்தியனுடைய உதவியையும் பரிபாஷையாக்கலில் ர. சுவாமிநாதன் வைத்தியனுடைய உதவியையும் கொண்டு சமுபல், பி. கிறீன் வைத்தியனால் மொழிபெயர்க்கப் பட்டது. யாழ்ப்பாணம் அமெரிக்க இலங்கை மிஷனுக்காக நாகர்கோவில் லண்டன் மிஷன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது: 1875”

VOCABULARIES OF MALARIA MEDICATE AND PHARMACY:

இந்த நூல் 1875-ல் நாகர்கோவில் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது. இதனையும் கிறீன் வைத்தியர் தமிழில் எழுதி வெளியிட்டார். இந்நூலை யான் பார்த்ததில்லை. ஆகையால் இதன் தமிழ்ப் பெயர் இன்னதென்று தெரியவில்லை.

கிறீன் வைத்தியர் வைத்திய சம்பந்தமாக மேலைத் தேசத்துச் சிகிச்சை முறைப்படி ஒன்பது நூல்களைத் தமிழில் எழுதி வெளி யிட்டார் என்று தெரிகிறது. அவற்றில் மேற்சொன்ன ஐந்து நூல்கள் இப்போது அருமையாகச் சிற்சிலரிடத்தில் கிடைக்கும். ஏனைய நான்கு