பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

நூல்களின் பெயர்தானும் தெரியவில்லை. அந்நூல்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது தமிழ்மொழி முன்னேற்றத்தில் கருத்துடை யவர்களின் கடமையாகும். அன்றியும் கிறீன் வைத்தியர் எழுதி வெளியிட்ட அந்த ஒன்பது நூல்களும் மீண்டும் அச்சிடப்பட வேண்டும். இத்தகைய வேலையை, சென்னை மாகாணத் தமிழர் சங்கம் போன்ற பெரிய சங்கங்கள் செய்ய மேற்கொள்ள வேண்டும்.

வையன்றியும், இலங்கையிலிருந்த அமெரிக்கன் மிஷன் சங்கத்தாரின் சார்பாக வீசகணிதம், நியாயசாஸ்திரம் (தர்க்க நூல்), வானசாத்திரம் முதலிய நூல்களும் தமிழில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டன. அந்த நூல்களும் இப்போது கிடைப்பது அருமை.