பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

6

என்று சொல்லாதே இறுமாப்பு என்று சொல்," என்று திருத்தினார்கள். தம்மைக் குறைகூறுவதாக இருந்தாலும் அதனைத் தூய தனித் தமிழிலே கூறவேண்டும் என்பது அத்தமிழ்ப் பெரியாரின் தனிமாண்பு. 'பைந்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் பெருமான்” என்று ஒரு பெரியார் தமது வழிபடு கடவுளைப் பற்றிக் கூறியது அவ்வமயம் நினைவுக்கு வந்தது.

66

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, அதனைத் தமது வாழ்நாள் வரையில் பேச்சிலும் எழுத்திலும் வாழ்க்கையிலும் இடைவிடாது நிறைவேற்றிய பெருந்தமிழன் மறைமலையடிகளாரின் பருவுடல் மறைந்துவிட்டது. ஆனால், அவரது புகழுடம்பு தமிழ் நாடெங்கும் தமிழ்க் காற்றுடன் கலந்து வீசுகிறது. வாழ்க அவர் புகழ்.

மறைமலையடிகளின் அமைதியான தோற்றமும், இனிய குரலும், தனித்தமிழ் பேச்சும் எமது மனத்தை விட்டகலா. அவரை நினைக்கும் போதெல்லாம் என் மனம், அடிகள் ஒரு பெருந்தமிழன் என்று கூறுகிறது.