பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

207

இனிமையும் அழகும் உள்ள கவிதைகளுக்குப் பாரசீக மொழி பேர் போனது. அறிஞர் மெச்சிப் புகழ்கிறார்கள். பாரசீக மொழிக் கவிதைகளில் உமர்கயாம் என்னும் கவிஞர் இயற்றிய ருபையத் என்னும் செய்யுட்கள் பேர்போனவை. இந்த உலக வாழ்க்கையின் இன்பங்களை அச்செய்யுட்களில் உமார்கயாம் பாடியுள்ளார். அந்தக் கவிதைகளை மேல்நாட்டார் விரும்பிப் படித்து மகிழ்வர். உமார்கயாம் செய்யுட்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. கவிமணிஅவர்கள் அவற்றில் சில பாடல்களைத் தமிழில் பாடியுள்ளார். அவை 'உமார்கயாம் பாடல்கள்' என்பவை. உமார்கயாம் தம்முடைய செய்யுட்களில் மதுக்கிண்ணத்தையும், அழகான மங்கையையும், பாரசீகக் கவிதைகளில் தலைசிறந்த ஒரு நூலின் பெயரையும், இனிய இசைகளையும் புகழ்ந்துள்ளார். அப்பாடலை மொழிபெயர்த்துப் பாடிய கவிமணி அவர்கள், உமார்கயாம் மெச்சின பாரசீகக் கவிதை நூலுக்குப் பதிலாகக் கம்பனுடைய இராமாயணத்தைக் கூறுகிறார். அச்செய்யுள் : 'வெய்யிற் கேற்ற நிழலுண்டு

வீசுந் தென்றற் காற்றுண்டு

கையிற் கம்பன் கவியுண்டு

கலசம் நிறைய மதுவுண்டு

தெய்வ கீதம் பலஉண்டு

தெரிந்து பாட நீயுமுண்டு

வையத் தருமிவ் வனமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ’

வேறு சில பாரசீகக் கவிதைகளைக் கவிமணி அவர்கள் ‘பாரசீகத் தனிப் பாடல்கள்' என்னும் தலைப்பில் செய்யுட்களாகப் பாடியுள்ளார்.

வெள்ளக்கால் திரு. வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்கள், கவிமணியவர்கள் காலத்தில் வாழ்ந்த புலவர், இருவரும் நெருங்கிய நண்பர்கள். சுப்பிரமணிய முதலியார் அவர்கள், நெல்லைச் சிலேடை வெண்பா, கோம்பி விருத்தம், சுவர்க்க நீக்கம் முதலான செய்யுள் நூற்களை இயற்றிய புலவர். கவிமணியவர்கள், முதலியார் அவர்களை எண்பதாண்டான இளைஞர்' என்று பாராட்டியுள்ளார். (கவிமணியின் உரைமணிகள் என்னும் நூலைக் காண்க) முதலியார் அவர்களைப் பற்றிக் கவிமணி எழுதுகிறார்.

6