பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

209

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள், தமிழ்மொழி வளர்ச்சியைப் பற்றிக் கூறிய கருத்து கருதத்தக்கது. 1951-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி ரேடியோ நிருபர், கவிமணியவர்களைப் பேட்டி கண்டபோது கவிமணியவர்கள் இதுபற்றிக் கூறியது:-

'தமிழ் வளர்ச்சிக்கு முதலாவது வேண்டியது கலாசாலைகளில் தமிழின் மூலமே எல்லாப் பாடங்களும் கற்பிக்கவேண்டும். காரியா லயங்கள் அனைத்திலும் கடிதப் போக்குவரத்துக்குத் தமிழையே உபயோகப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் அவசியமும் ஆர்வமும் உண்டாகும். பல புஸ்தகங்கள் வெளிவரும். மொழி வளரும். இங்கிலீஷ், பிரஞ்சு, ஜெர்மன் முதலிய பாஷைகளிலுள்ள நூல்கள் தமிழ் மொழியில் நமக்கு வேண்டும். மொழிபெயர்ப்பு முக்கியமானது. அநேக நூல்களை வேறு பாஷைகளிலிருந்து மொழி பெயர்க்க வேண்டும். முதல் நூல்களைத் தமிழ் மொழியிலேயே எழுதவேண்டும் என்பது சொல்லவே வேண்டியதில்லை. கற்றவர்கள் தாங்கள் எழுதும் முதல் நூல்களைத் தாய் மொழியிலேயே எழுதவேண்டியது அவசியம்.” (எனது இலட்சியம். கவிமணியின் உரைமணிகள்)

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிமணி அவர்கள் கொண்ட கருத்து இப்போது ஓரளவு செயற்பட்டு வருகிறது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களுக்கு இசைக் கலையிலும் ஆர்வமும் பயிற்சியும் உண்டு. 'தேசக்கொடி’ என்னும் செய்யுளை அவர் இசைப்பாட்டாகவே பாடியுள்ளார். இசைப் பாடலைப் பற்றி அவர் கொண்ட கருத்துக்கள் போற்றத்தக்கவை. அவர் கூறுகிறார்:

66

‘பாடல்களைப் பண்ணோடு பாடும் போது தான் அதற்கு உயிர் உண்டாகிறது; பொருள் விளக்கம் ஏற்படுகிறது; பூரண மாகிறது. ஒருவனது மனக்கருத்து முழுமையும் அலுங்காத குலுங்காத வெறும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்திவிடமுடியாது. வெறும் சொற்களுக்கு அந்தச் சக்தி இல்லை. அவற்றோடு எடுத்தல், படுத்தல், நீட்டல், குறுக்கல் முதலான உச்சரிப்பு வேறு பாடுகள் கலக்கவேண்டும். அதாவது பாவத்தை வெளிப்படுத்தும் இசை கலக்கவேண்டும். இசையும் வார்த்தையும் கலந்தால்தான் இதயம் பூர்ணமாய்த் திறந்ததாகிறது.

“ஐயா நீ அருள் செய்ய வேண்டும் - உன்றன்

அடியிணை யன்றிவே றொருதுணை அறியேன்