பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

என்ற அடிகளைப் பண்ணோடு இசைப்பதனால் உண்டாகின்ற பொருள் வெறும் வாசிப்பினால் மட்டும் உண்டாகுமா?

ஒருநாளுமில்லை.

இசை பாடுகிற பாடகர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங் களை அவர்களுக்குக் கவிமணி கூறுகிறார்:”கீர்த்தனைகளைப் பாடும் பாகவதர்கள் கவனிக்க வேண்டியவை நிறைய உண்டு. முதலாவது, சங்கீதத்தைப் போலவே அவர்கள் சாகித்தியத்தையும் மதிக்க வேண்டும். இரண்டாவது, பாட்டின் பொருளை அவர்கள் நன்கு தெரிந்து அப்பொருள் விளங்குமாறு தெளிவுபட உச்சரிக்க வேண்டும். இசை ஒன்றையே கவனித்து நெடிலைக் குறுக்கியும், குறிலை நீட்டியும் சில எழுத்துக்களை விழுங்கியும் தேய்த்தும் உச்சரித்துப் பொருட்பிழை உண்டாக்கக் கூடாது. மூன்றாவது படிக்குமாறு செய்யவேண்டும். அவற்றின் பக்கத்தில் சிறுகுறிப்புக் கூடக் கொடுக்கலாம்.'

கவிமணியவர்கள் சாசன எழுத்துக்களைப் படித்து ஆராய்ந்து சில கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்கள். புலைப்பேடி, சாசனங்களும் விநோத வியாக்கியானங்களும், திரிபுவனதேவி சாசனம், சோழபுரம் சாசனம், உலக முழுதுடையாள் சாசனம், பராந்தக பாண்டியன் சாசனம் முதலான கட்டுரைகள், வரலாறுகளைச் சாசன அடிப்படையில் ஆராய்கிற கட்டுரைகளாகும்.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையவர்கள் சிறந்த கவிஞர். கவிஞருக்கு இருக்கவேண்டிய பரந்த உள்ளம் படைத்தவர். தேச பக்தர். கல்வெட்டாராய்ச்சியாளர். வரலாற்று ஆசிரியர். அடக்க மாக வாழ்ந்து கவிதைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். அவருடைய பாட்டுகள் உயிருள்ளவை. ஆகவே அவை அழியாப் புகழ் படைத்தவை. நம்முடைய காலத்தில் வாழ்ந்து நற்றொண்டாற்றின. அவருக்கு நம்முடைய அஞ்சலியைச் செலுத்துகிறோம்.