பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண. பண்டித ஹிஸ்ஹெல்லெ தருமரதன தேரோ*

இலங்கையிலே கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ் ஸெல்லை என்னும் ஊரில் கருணாநாயக பதிரன்ன ஹெலாகே என்று பெயர் பெற்ற உயர்தரக் குடும்பத்தில் அருள் திரு. தருமரதன தேரோ பிறந்தார். இவருடைய தந்தையாரின் பெயர் ஹெர்மானிஸ் அப்புஹாமி என்பது; தாயார் திருமதி புஞ்சினேனா குமாரசிங்க ஹாமினே என்பவர். இவர்களுக்கு மூன்றாவது குமாரனாகப் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் தர்மபாலர் என்பது. தர்மபாலர் 1914-ஆம் ஆண்டு தை மாதம் 26-ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே இவர் கல்வி பயில்வதில் ஆர்வமுடையவராய்ப் பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றார்.

இளைஞரான தர்மபாலர் தம்முடைய பதினாறாவது வயதில் பிக்ஷுவாக எண்ணங்கொண்டு, தம்முடைய உறவினரான திரு, ஞானோதயதேரரிடம் சென்று அவருக்குச் சீடரானார். 1930-ஆம் ஆண்டில் புத்த சங்கத்தைச் சேர்ந்து துறவியானார். பிக்ஷுவானவுடன் தருமரதன தேரோ என்று பெயர் பெற்றார்.

பிக்ஷுவான தருமரதன தேரோ, ஞானோதய மகாதேரரால் நிறுவப்பட்ட சரஸ்வதி பிரிவேணா என்னும் கலாசாலையில் சேர்ந்து பாலி, சமஸ்கிருதம், சிங்களம் என்னும் மொழிகளையும், மற்றும் சில சாத்திரங்களையும் கற்றார். 1936- ஆம் ஆண்டில் ண்டில் முதல் பரீட்சையிலும், 1939-ஆம் ஆண்டில் மத்திய பரீட்சையிலும் தேறிப் பின்னர் 1945-ஆம் ஆண்டில் பண்டிதர் பட்டம் பெற்றார். சரஸ்வதி பிரிவேணையில் கல்வி பயின்று கொண்டிருந்தபோதே இவர், அப்பிரிவேணையின் ஆசிரியராகவும் இருந்து பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்து வந்தார். தருமரதன தேரோ அவர்கள் தமிழ் கற்ற வரலாறு குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரத்தில் ஆங்கிலம் பயில்வதற்காகத் தேரோ அவர்கள் சென்றபோது தமது சொந்த ஊராகிய ஹிஸ்ஸெல்லை நகரத்தில் தங்கினார். அவ்வூரில் அப்போது *பாரதி. 14வது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ், 1996.