பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

217

(1945) ஆஸ்பத்திரியின் தலைவராக இருந்தவர் யாழ்ப்பாணத்துத் தமிழரான டாக்டர். ஏ. சின்னதம்பி என்பவர். சிறிதளவு சிங்களம் கற்ற டாக்டர் சின்னதம்பி சிங்கள மொழியை நன்றாகக் கற்க விரும்பி, அங்கு வந்திருந்த தருமரதன தேரோவைக் கண்டு தமக்குச் சிங்கள பாஷையைப் படிப்பிக்கும்படி கேட்டார். தேரோ அவர்கள் அந்த வாய்ப்பைத் தமக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி, ஒரு நிபந்தனையின் மேல் அவருக்குச் சிங்களம் கற்பிப்பதாக உடன்பட்டார். அந்த நிபந்தனை என்னவென்றால், தேரோ அவர்கள் டாக்டருக்குச் சிங்களம் கற்பிப்பதென்பதும், டாக்டர் அவர்கள் தேரோவுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டும் என்பதுமாகும்.

தேரோ அவர்கள் விரைவில் தமிழைக் கற்றுக்கொண்ட படியால், டாக்டர் சின்னதம்பி அவர்கள் தேரோவை யாழ்ப்பாணத்துக்குப் போய் அங்கே இந்துக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிக்குமாறு கூறினார். தேரோ அவர்கள் யாழ்ப்பாணம் சென்று, இந்துக் கல்லூரியில் தமிழையும், ஆங்கிலத்தையும் நன்கு பயின்றார். 1946-ஆம் ஆண்டு தமிழில் பண்டித பரீட்சையில் தேறியதோடு கொழும்பு நகரில் நடைபெற்ற O.S.S. தமிழ்ப் பண்டித பரீட்சையிலும் வெற்றி பெற்றார். இவ்வாறு தமிழ் கற்றுத் தேர்ந்த தேரோ அவர்கள், யாழ்ப்பாணத்துச் சாவ கச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்து மாணவர்களுக்குச் சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்பித்துவந்தார். அதே சமயத்தில், இலங்கைச் சர்வகலாசாலைப் பிரவேச பரீட்சைக்கும் படித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் தான் இவர், தமிழ்-சிங்கள மா அகராதியின் முதல் பாகத்தை எழுதி அச்சிட்டார்.

1949-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைச் சர்வகலா சாலைப் பிரவேச பரீட்சையில் தேறியவுடன், இலங்கைச் சர்வகலா சாலையில் சேர்ந்து ஏனைய பாடங்களுடன் சிங்களத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாவது மொழியாகவும் பயின்று, 1953ஆம் ஆண்டு பி.ஏ. பரீட்சையில் கௌரவப் பட்டம் பெற்றார்.

ம்

பின்னர், இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நாவலப் பிட்டியில் உள்ள கதிரேசன் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்து ஏறத்தாழ ஐந்து ஆண்டு கல்வி கற்பித்து வந்தார். 1957-ஆம் ஆண்டு கதிரேசன் கல்லூரியை விட்டு சஹிரா கல்லூரியில் சில காலம் ஆசிரியராகக் கல்வித்தொண்டு செய்தார். அவ்வாண்டு இறுதியில், தம்முடைய குருவாகிய மகா தேரோவின் விருப்பப்படி அக் கல்லூரியை விட்டு