பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

சரஸ்வதி பிரிவேணைக்கு வந்து, அதன் துணை முதல்வராகக் கடமை ஏற்றுக்கொண்டு கல்வித் தொண்டினைச் சிறப்பாகச் செய்து கொண்டு வருகிறார்.

சரஸ்வதி பிரிவேணையில் தருமரதன தேரோ அவர்கள் ஆசிரியராக வந்தபிறகு அக்கல்வி நிலையத்தைப் பெரிதும் வளர்ச்சி பெறச் செய்தார். முன்பு கற்பிக்கப்பட்டுவந்த சிங்களம், சமஸ்கிருதம், பாலி, பௌத்த தருமம், சரித்திரம் முதலிய பாடங்களுடன் புதியவாக ஆங்கிலம், தமிழ், சரித்திரம், கணிதம் முதலிய பாடங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். S.S.C., H.S.C., U.E. (University Entrance) முதலிய வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. கல்வி பயிலும் மாணாக்கர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு வந்தது. ஏறத்தாழ 650 மாணாக்கர்கள் கல்வி கற்றுவருகின்றனர். பல பௌத்த பிக்குகளும் இலவசக் கல்வி பயின்றுவருகிறார்கள். 1963-ஆம் ஆண்டு இந்த சரஸ்வதி பிரிவேணை, வித்தியோதயப் பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப்பட்டு, சரஸ்வதி வித்யோதயப் பிரிவேணை என்று பெயர் பெற்றது.

1958-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடை பெறும் பி.ஏ. பரீட்சையில் தேறினார்.

இவ்வாறு பல மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராக விளங்கும் தருமரதன தேரோ அவர்கள், பேர்பெற்ற எழுத்தாள ராகவும் விளங்குகிறார். இளமையிலேயே இவர் கட்டுரைகளையும் கவிதை களையும் எழுதத் தொடங்கினார். இப்போது இலங்கையில் சிறந்த து எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். பல எழுத்தாளர் சங்கங்களி லும் இலக்கியச் சங்கங்களிலும் தலைவராகவும், துணைத்தலைவராக வும், அங்கத்தினராகவும் இருக்கிறார்.

சென்ற ஆண்டு மலாயா நாட்டின் தலைநகரமாகிய கோலாலம் பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்று அந் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

1962-ஆம் ஆண்டில், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் கொழும்பு சஹிரா கல்லூரியில் கூட்டிய கூட்டத்தில் தருமரதன தேரோவுக்கு வெள்ளி விளக்கை வழங்கிக் கௌரவப்படுத்தியது.

1960-ஆம் ஆண்டு, இலங்கையிலுள்ள பதுளை நகரத்தில் உள்ள மலையக் கலை இலக்கிய மன்றம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் அளித்துப் பாராட்டியது.