பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

அவருக்கு அஞ்சி விலகிப் போகிறார்கள் என்பது இதன் கருத்து. இதில் துறவிகள் கடவுள் என்று கூறப்பட்டிருப்பது நோக்குக.

மதுரைக் காஞ்சியில்,

தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில் தொன்முது கடவுள் பின்னர் மேய

வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந

என்னும் அடிகளில் கடவுள் என்னும் சொல் வந்துள்ளது. இச் சொல்லுக்கு முனிவனாகிய அகத்தியன் என்று நச்சினார்க் கினியர் பொருள் கூறியிருக்கிறார். இவ்வாறு பொருள் கூறியதோடு அமையாமல் கலித்தொகையில் உள்ள கடவுள் பாட்டைச் சுட்டிக் காட்டி, “இருடிகளையும் கடவுள் என்று கூறியவற்றானும் காண்க” என்று விளக்கம் கூறியிருக்கிறார். இதனால், இருடிகளாகிய துறவிகளும், முனிவர்களும் கடவுள் என்னும் பெயர் பெற்றிருந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.

நச்சினார்க்கினியர் சுட்டிக் காட்டிய கலித்தொகைக் கடவுட் பாட்டு, மருதக்கலி 28-ஆம் பாட்டாகும். இந்தப் பாட்டில், தலைமகள், தலைமகனை நோக்கி, 'நீ யாண்டுச் சென்றிருந்தாய்' என்று கேட்க, அவன் கடவுள் (முனிவர்) தங்கியிருந்த இடத்தில் சென்று தங்கினதாகக் கூறினான்.அவன் கூற்றை நம்பாத தலைவி, அவன் பரத்தைமாட்டுச் சென்றதாகக் கருதி அவனைச் சினந்து கூறுகிறாள். அப்பாட்டிலே முனிவர், கடவுள் என்று கூறப் படுகிறார்.

நன்றும்,

தடைஇய மென்றோளாய் கேட்க வா யாயின் உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங் கடவுளர் கட்டங் கினேன்.

"பெரிதும் பெருத்த மெல்லிய தோளினையுடையாய்! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாயிற் கேள்; யாம் இருவரும் போய் உடனே துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேன் என்றான்" (நச்சினார்க்கினியர் உரை).

இவ்வாறு தலைமகன் கூறியதைக் கேட்ட தலைமகள்,