பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கிழக்கு மேற்கு என்னும் சொற்கள் எந்தக் காலத்தில் திசை களுக்குப் பெயராக அமைந்தன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட சூடாமணி நிகண்டிலே கிழக்கு மேற்கு என்னும் சொற்கள் திசைப் பெயராகக் காட்டப்பட்டிருப்பதை மேலே கூறினோம். அதற்கு முந்தியும் இச்சொல் வழங்கப்பட்டதா என்பதை ஆராய்வோம். இதற்குப் பழைய தமிழ்ச் சாசனங்கள் உதவி புரிகின்றன.

காஞ்சீபுரத்துக்கு அடுத்த கூரம் என்னும் ஊரில் “விச்சாவிநீத பல்லவ பரமேசுவர கிருகம்” என்னும் கோயிலைப் பல்லவ அரசன் கட்டினான். விச்சாவிநீத பல்லவன் என்பது வித்தியாவிநீத பல்லவன் என்பதன் திரிபு. வித்தியாவிநீதன் என்பது பரமேசுவர வர்மன் என்னும் பல்லவ அரசனின் சிறப்புப் பெயர். இவன் வாதாபி கொண்ட நரசிம்மவர்மனின் மகன். கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவநாட்டை அரசாண்டான். இந்த அரசன் மேற்படி கோயிலைக் கட்டி, அதற்குச் செப்பேட்டுச் சாசனத்தையும் எழுதி வைத்தான். அந்தச் செப்பேட்டுச் சாசனத்துக்குக் கூரம் செப்பேடு என்பது பெயர். இச்சாசனத்தில் நிலத்தின் எல்லையைக் கூறுகிற இடத்தில் கிழக்கு மேற்கு என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது.

"இந்நிலத்துக்குக் கீழ்பாலெல்லை முதுகாட்டு வழியின் மேற்கும், தென்பாலெல்லை ஊர்புகு வழியின் வடக்கும், மேல்பாலெல்லை ஊர்புகு வழி நின்றும் வடக்கு நோக்கி நாட்டுக் காலுக்கே போன வழியின் கிழக்கும், வடபாலெல்லை நாட்டுக் காலின் தெற்கும் இந்நான்கெல்லை யகத்தும்.

9910

என்று அந்தச் சாசனம் கூறுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டி லிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனுடைய வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகின்றது:

"மற்றிதற்குப் பெருநான்கெல்லை தெற்றென விரித்துரைப்பிற் புகரறு பொழின் மருங்குடுத்த நகரூர் எல்லைக்கு மேற்கும், மற்றிதற்குத் தென்எல்லை குளந்தை வங்கூழ் வந்தை செய்க்குங் களத்தைக் குளத்திலாலுக்கும் வடக்கும், மற்றிதற்கு மேலெல்லை அற்றமில்லாக் கொற்றன்புத்தூரோடு மைஇருப்பைச் செய்யிடை மேற்றலைப் பெருப்பிற்குக் கிழக்கும், மற்றிதற்கு வடபாலெல்லை காயலுட் கமலம் மலரும் பாயலுள் வடபாலைப் பொறுப்பிற்குத் தெற்கும் இவ்வியைந்த பெரு நான் கெல்லையிற்பட்ட பூமி.”11