பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

45

இந்தப் பாண்டியன் நெடுஞ்சடையனுக்கு ஜடிலவர்மன் என்னும் பெயரும் உண்டு. இவனுடைய மற்றொரு செப்பேட்டுச் சாசனம் ஸ்ரீவரமங்கலம் என்னும் ஊரின் எல்லையை இவ்வாறு கூறுகிறது.

66

"மற்றிதன் பெருநான்கெல்லை கீழெல்லை நிலைக்காணி மங்கலத்தெல்லைக்கும் மிளந்தீயங்குடி எல்லைக்கும் மேற்கும், தென்னெல்லை பெருமகற்றூ ரெல்லைக்குங் கள்ளிக்குடி எல்லைக்கும் வடக்கும் மன்னியசீர் மேலெல்லை கடம்பங்குடி எல்லைக்கும் குறுங்குடி எல்லைக்குங் கிழக்கும் வட வெல்லை காராளவய லெல்லைக்குத் தெற்கு மிவ்விசைத்த பெருநான் கெல்லை அகத்து.

9912

இவ்வாறு கி.பி. 7-ஆம் 8-ஆம் நூற்றாண்டுச் சாசனங்கள், கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்களைக் கூறுகின்றன. இதனால், பாண்டிமண்டலம் தொண்டைமண்டலங்களிலே இச்சொற்கள் அக்காலத்திலேயே வழங்கிவந்தன என்பது தெரிகிறது. ஆனால், அக்காலத்தில் குணக்கு குடக்கு என்னும் சொற்கள் மறைந்து விட்டதாகக் கருதக்கூடாது. குணக்கு குடக்கு என்னும் சொற்கள் நூல் வழக்கிலும் கிழக்கு மேற்கு என்னும் சொற்கள் பேச்சுவழக்கிலும் இருந்துவந்தன. இவ்வாறு சில நூற்றாண்டுகள் இருந்த பிறகு, குணக்கு குடக்கு நூல்வழக்கிலும் மறைந்து கிழக்கு மேற்கு அவற்றின் இடத்தில் அமர்ந்து கொண்டன.

சொற்கள் வழங்கப்படாமற் போனால், அவை வழக் கொழிந்து மறைந்துவிடுகின்றன என்பதற்குக் குணக்கு குடக்கு என்னும் சொற்கள் சான்று கூறுகின்றன அன்றோ?

1.

2.

3.

4.

- aj s Ċ Lo con ∞ oi

5.

காலமறிதல் - 8.

6ஆம் செய்யுள் 9-10.

அடிக் குறிப்புகள்

சிலப்பதிகாரம் கட்டுரைச் செய்யுள். 6-ம் செய்யுள்.

நீர்ப்படைக் காதை 195-199.

6. பாத்திர மரபு கூறிய காதை 99-100. மூன்றாம் பத்து 2-ஆம் செய்யுள்.

7.

8.

9.

திருமாலை 19-ஆம் செய்யுள். இடப்பெயர்த் தொகுதி – 5.

10. A Pallava Grant from Kuram. S.I.I. Vol. 1.

11. Velvikudi Grant of Nedunjadaiyan. Epigraphi Indica. Vol. XVII.

12. Indian Antiquary Vol. XXII. P. 57-75.