பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

சொற்கள் மாற்றி எழுதப்பட்டதுபோல, சாசன வாசகங்கள் மாற்றி எழுதப்படுவதற்குக் காரணம் இல்லை. ஆகவே அன்று எழுதப்பட்ட சொற்களாகவே இன்றும் உள்ளன. அவை மாற்றப்படாமல் இருப்பதனாலே இந்த ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றன என்பதில் ஐயம் இல்லை.

சாசனங்களிலே கொடு என்னும் சொல் பயிலப்படாமல் குடு என்னும் சொல்லே நெடுக பயிலப்பட்டிருப்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

தென் ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, இராசராச சோழன் காலத்துச் சாசனம்: "திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுக்கிற நிலத்திற்குக் கீழ்பாற்கெல்லை. குலோத்துங்க சோழன் காலம்: “எம்பெருமானுக்குக் காணியாகக் குடுத்து திருக்கை மலரிலே நீர் வார்த்துக் குடுத்தேன்.”1

தென் ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா சிதம்பரம் கோப் பெருஞ் சிங்கதேவர் காலத்துச் சாசனம்: “பிள்ளையாழ்விப் பிள்ளைக்கும் செல்லப் பிள்ளைக்கும் அசலுக்குக் குடுத்த காசு 1311. அப் பாண்டானுக்குக் குடுத்த காசு 1200. ஈசான தேவனுக்கு ஒற்றிபடிக்குக் குடுத்த காசு 452. முத்திதேவனுக்கு ஒற்றி படிக்குக் குடுத்த காசு 405. எருக்குடைச்சிக்கு ஒற்றிக்கு குடுத்த காசு 631. கொண்டானுக்கு ஒற்றிபடிக்குக் குடுத்த காசு 1000 ஆண்டார் பெரிய தேவருக்கு ஒற்றி படிக்குக் குடுத்த காசு 1000. ஆண்டார் பெரிய தேவருக்கு ஒற்றிபடிக்குக் குடுத்த காசு 200. பஞ்சாட்சரதேவர் திருச்சிற்றம்பல உடையானுக்குக் குடுத்த காசு 1600. பெரியார்க்கு குடுத்த காசு 250. இந்நிலத்துக்கு ஒற்றிக்கு திருஞான சம்பந்தருக்குக் குடுத்த காசு 300."2

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி தாலுகா இராசராச சோழர் காலம்: “நீர்வார்த்துக் குடுத்து இந்நாள்வரையும் பிரமாணம் பண்ணிக் குடாதே நின்றமையில் இற்றை நாளால் தன்மதான பிரமாணம் பண்ணிக் குடுக்கக் கடவேனாகவும், குடுத்திலேனாகில் இந்தத் தன் மதானப் பிரமாண இசைவு தீட்டே பிரமாணமான தாகவும்.

"விலைப் பிரமாண இசைவு தீட்டுக் குடுத்த பரிசாவது... நாங்கள் விற்றுக் குடுக்கின்ற நிலத்துக்கு இசைந்த கீழ் பாற்கெல்லை...விற்று விலைப் பிரமாண இசைவு தீட்டுக் குடுத்தோம்...இப்படி சம்மதித்து விலைக்கறவிற்றுப் பொருளறக் கொண்டு விற்று விலைப் பிரமாண இசைவு தீட்டு குடுத்தோம்.”4