பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

மேற்படி இராசராச சோழன் காலம்: “பெருமாள் மகள் புடோலி கிழவியேன் வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்குக் குடுத்த நற்பழங்காசு ஐந்து.”12

ஆர்க்காடு மாவட்டம். அரக்கோணம் தாலுகா: “திருமாற் பேற்று மகாதேவற்கு வைத்த சோதி விளக்குக்கு விற்றுக்குடுத்த நிலமாவது...பெறுவிலைக் காணங் கிழிகைக்கொண்டு விற்று விலை யாவணஞ் செய்து குடுத்தேன்.'

9913

மேற்படி "தேவர் பண்டாரத்திலே சித்திரைத் திங்களிட்டுக் குடுப்போ மானோம். குடோமாகி லுண்டிகையும் பட்டிகையும் காவாதே தர்மாசனத்தே நிசதம் அரைக்கால் பொன்மன்ற ஒட்டிக் குடுத்தோம்."14

இதுகாறும் எடுத்துக்காட்டிய சாசனப் பகுதிகளிலிருந்து, குடு என்னும் சொல் நெடுகப் பயின்று வந்திருப்பதைக் காண்கிறோம். கொடு என்னும் சொல் ஓரிடத்திலும் பயிலப்படாதிருப்பதையும் காண்கிறோம். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன? குடு என்னும் சொல்லே சரியான உருவம் உடையது என்பதும் கொடு என்னும் சொல் பிற் காலத்தில் அதிலிருந்து திரிந்து வழங்கப்படுகிற சொல் என்பதும் தெரிகின்றன அல்லவா? குடு என்னும் சொல்லைப் பயின்றுள்ள நூற்றுக் கணக்கான சாசனங்களை மேற்கோள் காட்டலாம். இடம் விரியும் என்பதற்காகக் காட்டாமல் விடுகிறோம்.

குடு என்பது பேச்சு வழக்கிலுள்ள கொச்சைச் சொல்லாக இருக்கலாம்; அக்கொச்சைச் சொல்லைச் சாசனங்கள் வழங்கியிருக்கக் கூடும்; கொடு என்பதே சரியான சொல்லாக இருக்கக்கூடும் என்று சிலர் சொல்லக்கூடும். அப்படிக் கருதுவது தவறு. எல்லாச் சாசனங்களும் குடு என்றே எழுதியிருப்பதனால், குடு என்பதே இலக்கியச் சொல் என்பதில் ஐயமில்லை. மேலும், கொடு என்னும் சொல் இலக்கியச் சொல்லாக இருந்தால், அந்தக் கொடு என்னும் சொல்லைச் சில சாசனங்களாவது எழுதியிருக்கும் அல்லவா? அப்படிக் காணப்படாதபடியினால், கொடு என்பது திருத்தமான சொல் அன்று என்பதும் குடு என்பதே திருத்தமான இலக்கியச் சொல் என்பதும் பெறப்படுகின்றன.

வசனமாக அமைந்த சாசனங்களில் மட்டுமல்ல. செய்யுளாக எழுதப்பட்ட பழைய சாசனங்களிலும் குடு என்னும் சொல்லே பயிலப் பட்டிருக்கிறது. இதனாலும், குடு என்னும் சொல்லே திருத்தமான