பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ 83

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு இலக்கியச் சொல் என்பதை அறியலாம். அச் செய்யுள்கள் சிலவற்றைக் காட்டுவோம்:

செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை தாலுகா, திருவொற்றி யூர் சிவன் கோவிலில் உள்ள கல் எழுத்துச் சாசனக் கவி. இது அபராஜிதவர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் எழுதப்பட்டது. அச்சாசனக் கவியின் பகுதி இது:

நினைத்த நெல்வரும் பனிச்சைப் புலமுமென்

றிருபே ரேத்தமு மிவற்றுக் கேரியும்

பொருள்கைக் குடுத்துப் புவியறிய

அற்றமின்றி விற்றுக் கொண்டு

கன்மிசை எழுதி வைத்தனன்

ம... ருவழி மாநிலத் தினிதே

தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழூர், வீரட்டா னேசுவரர் கோவிலில் உள்ள கல்லெழுத்துச் சாசனச் செய்யுள். இது இராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்டது.

பாலிக்குங் கோவலூர் சிற்றிங்கூர் மருதூர் பதிமல்லம்

பதிற்றுப் பத்தொடு பதிற்றைஞ்சான

சாலிக்குப் புணையாகத் திருவுண்ணாமிகையார் கைக்கொண்டு கறவை ஒன்றால் ஆழாக்காங் கணக்குக் கோலிக்கொள் பால்பதினெண் ணாழிமுழக்குக் கோவல் வீரட்டர்க்கு மஞ்சனமாடக் குடுத்தான்

வேலிக்கோன் திறற்கம்பன் விறல்வீதி விடங்கன் வேந்தர் பிரானரு மொழிக்கு விண்ணப்பஞ் செய்தே16

(பதிற்றுப்பத்தொடு பதிற்றைஞ்சு - நூற்றைம்பது. காலி-பசு. திருவுண் ணாழிகையார் கர்ப்பக்கிருகத்தார். திருவுண்ணாழிகை - கர்ப்பக் கிருகம். வேலிக்கோன் கம்பன் வீதிவிடங்கன் இவன் சோழ அரசனின் உத்தியோகஸ்தன். அருமொழி அருமொழித்தேவர்; அதாவது, இராசராச சோழன்.)

ஷ கோவிலில் உள்ள மற்றொரு கல் எழுத்துச் சாசனச் செய்யுட் பகுதி. இதுவும் இராசராச சோழன் காலத்தது:

பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயிர் ஒரு முன் னாழிக் கிருமுன் னாழியும்