பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

திருநல்லூர்ச் சிற்ப உருவத்தைப்போலவே இந்தக் களக்காட்டுச் சிற்பமும் கலைப்பண்புடன் எழிலாக அமைந்து காட்சிக்கும் கருத்துக்கும் இன்பம் பயக்கின்றது. இவ்விரு உருவங்களும் சாத்திரக் கருத்தை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. களக்காட்டுச் சிற்பம் திருநல்லூர்ச் சிற்பத்தைவிடக் காலத்தினால் சற்றுப் பிற்பட்டது.

66

இடங்கொண்ட சக்தியும் எந்தை பிரானும்

நடங்கொண்டு நின்றமை யானும் அறிந்தேன்; படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலும் தாமாய் நின்றாடு கின்றாரே.

1.

(திருமந்திரம்)

அடிக்குறிப்புகள்

சடைமுடி அவிழாமல் இருப்பதைக் கொண்டு சடைகட்டி நடராசர் என்று இவ்வுருவத்திற்குப் பெயர் வழங்குகிறார்கள்.