பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

துடியும் தீச்சுடரும் அகல விலகியிருப்பதனாலே ஆக்கல், அழித்தல் என்னும் செயல்கள் இத்தாண்டவத்தில் முதன்மை பெறவில்லை என்பது தெரிகின்றது. ஆன்மாவைக் குறிக்கிற பாம்பும் பாசக்கயிறும் இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆகவே, இது காத்தல் செயலாகிய திதி என்னும் செயலைக் காட்டுகிறது. அதாவது, சந்தியா தாண்டவமாகிய 'புஜங்கத் திராசம்' அல்லது 'புஜங்கலளிதம்’ என்னும் தாண்டவத்தை இச்சிற்பம் காட்டுகிறது.

காலின்கீழே முயலகன் உருவம் காணப்படுகிறது. இந்த முயலகனின் கைகளில் வாளும் கேடயமும் காணப்படுகின்றன. இப்படி முயலகன் உருவத்தை அமைப்பது தமிழ்நாட்டு மரபு அன்று; இச்சிற்பம் கன்னட நாட்டைச் சேர்ந்தது.

சித்திரைத் திங்களில் முழுநிலா நாளில் இறைவனை முறைப்படி பூசித்து வணங்கி இந்தச் சந்தியா தாண்டவத்தைத் தரிசித்தால், இதன் பலனாக ஸ்ரீகரம் (திருவும் கொற்றமும் புகழும்) கிடைக்கும் என்று காரணாகமம் கூறுகிறது.

இந்தத் தாண்டவத்துக்குரிய இசை கொல்லிப் பண்ணும் லக்ஷ்மேச தாளமும் என்று காரணாகமம் கூறுகிறது. கொல்லிப் பண்ணைக் கொல்லி கௌவாணம் என்றும் கூறுவர். இக்காலத்தில் இதனைச் சிந்து கன்னடா என்றும், நவரோஜ் என்றும் கூறுவர். கொல்லிப் பண் எண்வகைச் சுவைகளில் மருட்கை, இளிவரல் என்னும் சுவைகளையுடையது என்பர்.

குறிப்பு: இந்தக் காத்தல் செயலை மறைத்தல் செயலாகிய திரோபவத்துடன் தொகுத்துக் கூறுவதும் உண்டு.

மேலே கூறப்பட்ட இந்தச் சிற்ப உருவங்கள் எல்லாம் திரோபவம் என்னும் மறைத்தல் செயலைத் தெரிவிக்கின்றன. ஆன்மாவின் பாசங்கள் பரிந்து மலபரிபாகப்பட்டு இருவினையொப்பு அடைந்து இறுதியில் வீடுபேறாகிய மோக்ஷம் அடைவதற்காக இறைவன் திரோபவச் செயலைச் செய்கிறார். இந்தச் சிற்பமூர்த்தங்கள் இச்செயலை நன்கு விளக்கிக் காட்டுகின்றன.