பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இவ்வாறு பல பிறவிகள் எடுத்து உழல்வதினாலே உயிரில் படிந்திருக் கிற மலம் கழிகிறது.

‘புசிக்கப்படாமலிருக்கிற கர்மமானது நூறு கோடி, சதகோடி கற்பங்களானாலும் அழியாது' என்று பௌஷ்கராகமம்'1 கூறுகிறது காண்க. எனவே, மறைத்தல் (திரோபவம்) என்பது, உயிர்களை மீண்டும் மீண்டும் வினைப்போகங்களில் அழுத்தி, அதன் மூலமாக உயிருக்கு மலபரிபாகமும் இருவினையொப்பும் ஏற்படச் செய்வதாகும். ஆகவே, இத்தாண்டவம் மும்மலத்துடன் படிந்திருக்கிற ஆன்மாவில் நடக்கிறது. அதாவது தாண்டவமூர்த்தத்தில், திருவடியின் கீழேயுள்ள ஆன்மா வாகிய முயலகனிடத்தில் இச்செயல் நடக்கிறது.

மறைத்தல் என்றும், திரோபவம் என்றும் கூறப்படுகிற திரிபுர தாண்டவமூர்த்தியின் சிற்ப உருவங்கள் சில கிடைத்திருக்கின்றன. அவற்றை விளக்கிக் கூறுவோம்.

திருவரங்குளத்துச் சிற்பம்

புதுக்கோட்டையிலே திருவரங்குளம் என்னும் ஊர்ச் சிவன் கோவிலில் இந்த நடராச மூர்த்தம் இருந்தது. இதன் உருவ அமைப்பைப் படத்தில் காணுங்கள். (படம் 11 காண்க) சடைமுடி அவிழாமல் கட்டப் பட்டிருக்கிறது. வலது கையில் துடியும், இடது கையில் தீச்சுடரும், மற்றொரு வலது கையில் அபய முத்திரையும் இருக்கின்றன. எனவே, ஆக்கல் (துடி), காத்தல் (அபய முத்திரை), அழித்தல் (தீச்சுடர்) கிய முத்தொழி லும் இதில் அமைந்துள்ளன. இன்னோர் இடது கை வீசியகரமாகத் தாழ்ந்து இருக்கின்றது. ஆனால், இடது திருவடி தூக்கப்படாமல் முயலகன்மேல் ஊன்றி நிற்கிறது. மற்றொரு வலது திருவடியும் முயலகன் முதுகை மிதித்து இருக்கிறது.

இரண்டு திருவடிகளும் முயலகன்மேல் இருப்பதனாலே, மறைத்தல் என்னும் திரோபவச் செயலை இந்தத் தாண்டவம் குறிக்கிறது. மும் மலத்தினால் கட்டுண்டிருக்கிற முயலகன், குப்புறப்படுத்து இறைவன் திருவடிகளினால் மிதியுண்டு தலையை உயர்த்திக் காணப்படுகிறான்.

நான்காவதாகிய திரோபவச் செயலைக் காட்டுகிற இந்த அழகான அருமையான நடராசர் திருவுருவம், புதுக்கோட்டைத் திருவரங்குளம் என்னும் ஊரில் சிவன் கோவிலில் இருந்தது என்றும் கூறினேன். ஆனால், இப்போது இந்த அருமையான உருவம் இக்