பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது

அருளல் செயலாகிய ஊர்த்துவ தாண்டவம்

ஐஞ்செயல்களில் அருளல் என்னும் செயலை இத்தாண்டவம்

குறிக்கிறது.

இதற்குக் காளி தாண்டவம் என்றும் பெயர் உண்டு. இந்தக் காளிதாண்டவத்தைக் 'காளிகா தாண்டவம்' என்று கருதி மயங்கக் கூடாது. காளிதாண்டவம் ஐந்தாவது செயலாகிய அருளல் செயலைக் குறிப்பது; காளிகா தாண்டவம் முதலாவது செயலாகிய ஆக்கல் செயலைக் குறிப்பது. இது வேறு; அது வேறு.

6

காளியுடன் ஆடினபடியால் காளி தாண்டவம் என்றும், மிக வேகமாகச் சுழன்று ஆடுவதாகையால் சண்ட தாண்டவம் என்றும், ஒரு காலைத் தலைவரையில் மேலே தூக்கி ஆடுவதாகையால் ஊர்த்துவ தாண்டவம் என்றும், வீடுபேற்றினைத் தருவதாகிய அனுக் கிரகத்தின் பொருட்டுச் செய்வதாகையால் அருள் நட்டம் அல்லது அனுக்கிரக தாண்டவம் என்றும் இதற்கு வேறு பெயர்கள் உள்ளன.

66

6

'ஆடினார் பெருங்கூத்து காளி காண” என்று திருநாவுக்கரசர் கூறியபடியால், இதற்குப் பெருங்கூத்து என்னும் பெயரும் உண்டு போலும்.

"செயற்கரிய திருநடம்” என்று திருநாவுக்கரசரே கூறுகிற படியால், இத்தாண்டவம் செய்வது கடினமானது என்பது தெரிகிறது.

தொண்டை நாட்டுத் திருவாலங்காட்டிலே இந்தத் தாண்டவத்தைச் சிவபெருமான் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

காளி, நடனக் கலையில் பேர் போனவர். தம் பெயரால் காளீயம் என்னும் நடன நூலை இயற்றியதாகவும் கூறுவர். நடனத்தில் தமக்கு நிகர் ஒருவரும் இலர் என்று காளி இறுமாந்திருக்க, அதனை அறிந்த சிவபெருமான் அவருடன் நடனம் செய்து இந்த ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார் என்றும், காளி இத்தாண்டவத்தைச் செய்ய