பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

சங்கற்பமேயாகலின் அது திதியின்கண்ணும், வீடுபேறாவது மீட்சியின்றி இலயித்தலேயாகலின் அது சங்காரத்தின் கண்ணும் அடங்குமென்பது பற்றி, முத்தொழில் எனத் தொகுத்துக் கூறப்படும். விரித்துக் கூறுங்கால் ஐந்தொழில் என்றே எல்லா ஆகமங்கட்கும் துணிபென்க

996

ஊர்த்துவ தாண்டவமூர்த்தியின் உருவங்கள் பல கிடைத்திருக் கின்றன. அவற்றில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட அழகான அருமையான உருவம் ஒன்று நற்காலமாக நமக்குக் கிடைத்திருக்கிறது. தொண்டை நாட்டிலே திருவாலங்காடு என்னும் ஊரிலே சிவன் கோவிலில் உள்ளது இந்தத் திருவுருவம் (படம் 15 காண்க). இந்த ஊர்த்துவ தாண்டவமூர்த்தத்தில் சித்தாந்த சாத்திரக் கருத்துகள் பல

விளக்கப்பட்டுள்ளன.

இந்த மூர்த்தத்தில் தாண்டவ மூர்த்திக்கு எட்டுக் கைகள் அமைந் திருக்கின்றன. இறைவன், இடது காலைத் தலைவரையில் உயரத் தூக்கித் தாண்டவம் புரிகிறார். தாண்டவ வேகத்தில் சடைகள் அவிழ்ந்து பரந்து அலைகின்றன. சிற்ப உருவத்தில் இது நன்றாகக் காட்டப் பட்டிருக்கிறது. இதிலிருந்து இத்தாண்டவம் (இதற்குச் சண்ட தாண்டவம் என்றும் பெயர்) மிக வேகமாக நடக்கிறது என்பது தெரிகின்றது. திருவடியின்கீழே முயலகன் உயிர்ப்பின்றிச் செயலற்று விழுந்து கிடக்கின்றான். சிறு பாம்பு ஒன்று அவன் அருகில் காணப் படுகிறது.

சித்தாந்தக் கருத்துக்களை இனிது விளக்குகிற இந்தத் தாண்டவ உருவத்தை ஊன்றிப் பாருங்கள். இதன் அழகையும் இனிமையையும் காணுங்கள். இதனுள் அடங்கியிருக்கிற சாத்திரக் கருத்துகள் அறிந்து மகிழத்தக்கன.

இந்தத் தாண்டவமூர்த்தத்தில் அமைந்துள்ள சாத்திரக் கருத்துகளை விளக்குவோம்.

காலடியில் இருக்கிற முயலகனைப் பாருங்கள். முயலகன் உருவம் மிக மெலிந்தும், செயலற்று உயிர்ப்பில்லாமலும் காணப்படுகிறது. ஏன்? மும்மலத்துடன் பிணிக்கப்பட்டிருந்த உயிர் முயலகனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு விட்டது. பிரிக்கப்பட்ட உயிர் தாண்டவமூர்த்தியின் உயர்த்திய திருவடியில் (ஊர்த்துவ பாதத்தில் தங்கியிருக்கிறது. ஆகவே,