பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

127

சடப் பொருளாகிய மும்மலத்தோடு எஞ்சியிருக்கிற முயலகனின் உருவம் உயிர்ப்பில்லாமல் செயலற்று விழுந்து கிடக்கிறது.

முயலகனிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வீடுபேறு அடைந்த உயிர், இடது காலினால் உயர்த்தப்பட்டு அலைந்தாடுகிற சடையின் அருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

அவிழ்ந்து விரிந்து பரந்து அலைகின்ற சடைகள் ஞானத்தின் அடையாளம் என்று சாத்திரம் கூறுகிறது. "நுண் சிகை ஞானமாம் என்று திருமந்திரம் கூறுவது காண்க. எனவே, மும்மலத்துடன் சேர்ந்து அஞ்ஞானத்தில் படிந்திருந்த உயிரை இறைவன் தமது திருவருளாகிய பாதங்களினால் பக்குவப்படுத்தி, அதை அஞ்ஞானத்திலிருந்து பிரித்து எடுத்து ஞானமாகிய சடையுடன் தமது திருவடியினால் உயர்த்தி வைத்திருக்கிறார். எனவே, ஆன்மா வீடுபேறு என்னும் மோட்சம் பெற்று விளங்குவதை இந்தத் தாண்டவமூர்த்தத்தில் காண்கிறோம்.

துடி ஏந்திய வலதுகை அகன்று நிற்கிறது. அபய முத்திரையைக் காட்டுகிற இன்னொரு வலது கையும் அகன்று காணப்படுகிறது. தீச் சுடரை ஏந்திய இடதுகையும் அகன்று விலகி இருக்கிறது. மறைத்தல் (திரோபவம்) செய்கிற ஊன்றிய திருவடி, உயிரற்று வெறுஞ்சடலமாக இருக்கிற முயலகன்மேல் நிற்கிறது. எனவே, ஆக்கல்(துடி), காத்தல் (அபயகரம்), அழித்தல் (தீச்சுடர்), ஊன்றிய திருவடி (திரோபவம்) ஆகிய நான்கு செயல்களும் செய்து முடிந்துவிட்டன. இப்போது நிகழ்வது கடைசிச் செயலாகிய அருளல் (வீடுபேறு) என்னும் ஐந்தாவது தாண்டவம் என்பதை இந்தத் தாண்டவமூர்த்தம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்றது.

இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற ஏனைய கைகளில் உள்ள அடையாளங்களைப் பார்ப்போம்.

நான்கு வலது கைகளில் துடி ஏந்திய கையும், அபய முத்திரை யுடைய கையும் விலகியிருக்கின்றன என்று கூறினோம். ஏனைய இரண்டு வலது கைகளில் ஒன்றில் அடைக்காய் வெட்டும் கிளிக் கத்தியையும், மற்றொன்றில் திரிசூலத்தையும் ஏந்தியிருக்கிறார்.

அடைக்காயை (கொட்டைப்பாக்கு) நறுக்கும் பாக்கு வெட்டி கிளியின் உருவமாகச் சிறியதாக அமைக்கப்படுவது வழக்கம். இந்த அழகான சிறிய கத்தியை இத்தாண்டவத்தில் இறைவன் தம்முடைய