பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

சரணம்

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப் பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர் பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

(ஆட்டுக்)

வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி (ஆட்டுக்) ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும் சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த

ஆடிய வேடிக்கை பாரீர்!

(ஆட்டுக்)

இராகம் : சாருகேசி

தாளம் : மிச்சிரஜாதி ஜம்பை

பல்லவி

ஆடிய வேடிக்கை பாரீர் - ஐயா

ஆடிய வேடிக்கை பாரீர்

(ஆடிய)