பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

211

விளக்கெண்ணெய் ஆகிய ஆமணக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு. விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். கடலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் வழக்கம் இல்லை.

தாவரக் கொழுப்பாகிய எண்ணெய்களைவிட மிருகக் கொழுப் பாகிய வெண்ணெய்களில் அதிக சத்து உண்டு. ஆனால், மிருகக் கொழுப்புகளை மட்டும் உணவுடன் உபயோகிப்பது நலம் அல்ல. இரண்டையும் சேர்த்துக் கொள்வது நலம்.

தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் முதலிய தாவரக் கொழுப்பிலிருந்து டால்டா, வனஸ்பதி முதலிய பொருள்களைச் செய்கிறார்கள். அவைகளில் ஏ.டி. விட்டமின்கள் கிடையா. மீன் எண்ணெய்களிலும் நெய் வெண்ணெய் போன்ற மிருகக் கொழுப்பு களிலும் தான் ஏ.டி. விட்டமின்கள் உண்டு.

புரொட்டின்

புரொட்டின் என்னும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப் படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமை யாதது, முதன்மையானது. புரெட்டினைப் புரதம் என்றும் கூறுவர். புரொட்டின் (தசையை) உடம்பை வளர்க்கிறது. மேலும், அன்றாடம் உடம்பில் ஏற்படுகிற தேய்வு கழிவுகளை நிரப்பி, உடம்பை நன்னிலையில் வைக்கிறது. அன்றியும் சில நோய்களை வராதபடி தடுக்கிறது; உடம்புக்குச் சக்தி தருகிறது. தோல் சதை ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப் படுத்துகிறது.

எனவே, குழந்தைகளின் தேகம் வளர்வதற்குப் புரொட்டின் மிக அவசியமானது. வளர்ந்தவர்களின் தேகத்தில் ஏற்படுகிற தேய்வு கழிவுகளை நிரப்புவதற்கும் அவசியமாக வேண்டியிருக்கிறது. இதனால் உணவில் இது முதன்மையான பொருளென்பது தெரிகிறது.

தானியங்கள், பருப்புகள் காய்கறிகள், இறைச்சிகள் முதலிய வற்றில் புரொட்டின் உண்டு. ஆனால், தாவரப் பொருள்களில் இருந்து கிடைக்கிற புரொட்டினை விட, இறைச்சிகளில் இருந்து கிடைக்கிற புரொட்டின் சிறந்தது. இதனால், தாவரப் புரொட்டின் வேண்டாம் என்று