பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

உள்ளுணரா தொழுகுதலு முறுதூய்மை யின்மையு மெள்ளற்பா டிழிதொழில்செய் திழிகுலத்திற் றோன்றுதலும் கொள்ளற்பா டின்மையுங் கூறாச்சொல் கூறுதலுங் கள்ளுண்டு களித்தாடிக் கழிந்ததன் பயனாகும்.

20

9. இரவுண்ணா நோன்பு காத்தலின் பயன் அருளுடைமை யாவர்க்கும் மன்பென்று மகலாமை பொளுடைமை பொய்ப்பாடில் புல்லினார் பிரிவின்மை தெருளுடைமை தேசொளிவிட் டிலங்குதலும் திண்வனப்பும் இருளுண்ணா நல்விரதங் காத்ததன் பயனாகும்.

21

அருளிண்மை யறங்கொளினு மாய்ந்துணரும் அருளின்மை பொருளின்மை பொல்லாங்கு பொய்ப்பாடில் வாழ்க்கையு மருளிகளாய் மயலுற் றவர்போல மயங்குதலும் இருளுண்டு நல்விரத மிகழ்ந்ததன் பயனாகும்.

22

மௌனவிரதப் பயன்

தானத்தால் விளங்குதலும் தன்சொல்மிக்கூறுதலும் ஞானத்தால் விளங்குதலும் நால்வரிற் றலைவராய் வானகத்தி னிந்திரராய் மகிழ்ந்து வீற் றிருப்பதுவும் மோனத்தா லாகிய நன்முழுவிர தப் பயனாகும்.

10. தவசியரைப் பணிந்ததன் பயன்

வச்சிரக்கை வானவர்க்கு வையமெல்லா முழுநாளுஞ் சக்கரமா மன்னவற்கும் பலவாசு தேவர்கட்கு மக்கரமா தேவியரா யணிப் பட்டந் தாங்குதலும் நற்றவரைத் தான்பணிந்த நல்விரதப் பயனாகும்.

23

கழுதைநா யூர்ப்பன்றி காரட்டை மூஞ்சுறு மழுகநாற் கணத்துப்புழு வாகவே தோன்றுதலும் விழுமிய நன்மாதவரை வீங்கியதோர் மானத்தால் தொழுதடியைப் பணியா துவர்த்துமிழ்ந்த பயனாகும். பிணக்கில்லா மாதவரைப் பிணக்கறுக்க வெனவேத்தி வணக்கத்தா லுயர்குலமாம் வழுவில்லா வுவகையோ டுணக்கொடுப்பிற்றுப்புரவ முவந்ததனால் வனப்பாகுந் தணப்பில்லா நல்விரதந் தாங்கியதன் பயனாகும்.

முற்றும்.

  • * *

25

24

26