பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு - மொழிபெயர்ப்பு - உரை

நேமிநாதம், நந்திக்கலம்பகம், பிறநூல்கள்

இத்தொகுதியில் நோமிநாதம், மத்தவிலாசம், இறைவன் ஆடிய எழுவகைத்தாண்டவம், உணவு நூல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பல்வேறு சூழல்களில் மேற்குறித்த நூல்களை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் உருவாக்கியிருக்கிறார்.

மயிலாப்பூரின் வரலாற்றைக் கூறுவதாக நேமிநாதம் அமைந் துள்ளது. எனவே இருபத்தியாறு செய்யுட்களைக் கொண்ட இந்நூலை பதிப்பித்து மயிலாப்பூரின் வரலாறு குறித்து அறிவதற்கு உதவியுள்ளார்.

மகேந்திர விக்கிரவர்மன் மத்தவிலாசம் எனும் நாடகத்தை சமசுகிருதத்தில் எழுதியுள்ளார். இதனை மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சிவபெருமான் ஆடிய ஏழுவகையான தாண்டவங்களை எழுவகைத் தாண்டவம் எனும் இக்குறுநூலில் விளக்கியுள்ளார். பரதம் எனும் கலையின் பழமை குறித்து அறிவதற்கு இந்நூல் பெரிதும் சான்றாக உள்ளது.