பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

தேவ:

51

ஆமாம்; அதுதான் சரி. அப்படியே செய்கிறேன். (பிடுங்கப் பார்க்கிறான்)

எட்டிநில். காபாலிகத் திருட்டுப்பயலே.

(கையால் விலக்கித் தள்ளி காலினால் உதைக்கிறான்)

விழுந்துவிட்டேனே.

தேவடியாள் மகனே! உன்னை உயிரோடு விடுகிறேனா பார்!

(ஓடிப்போய் பிக்குவின் தலையைப் பிடிக்கிறாள். பிக்குவுக்கு மொட்டைத் தலையாகையால் அவனைப் பிடிக்கமுடியாமல் அவளும் கீழே விழுகிறாள்).

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ.

காபாலி:

(தனக்குள்) பிக்குகள் தலைமயிரை மழித்துவிட வேண்டும் என்று கட்டளையிட்ட புத்தபகவான் திரிகாலஞானி. (உரக்க) எழுந்திரு அம்மணி, எழுந்திரு. (தேவசோமையைக் கைகொடுத்துத் தூக்கி விடுகிறான்).

பாருங்கள் மகேசுவரர்களே! பாருங்கள். சந்நியாசி என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாகசேனன்-- போக்கிரிப்பயல், என் மனைவியின் கையைப் பிடித்து பாணிக்கிரகணம்" செய்கிறான்.

இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே. துன்பத்தில் விழுந்தவர்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்பது எங்கள் மதக்கட்டளையாகும்.

இதுவும் உங்கள் சர்வஜ்ஞன் (புத்தன்) கட்டளையா? முதலில் விழுந்தவன் நான் அல்லவா? நல்லது. இருக்கட்டும். இப்போ, உன்னுடைய மண்டை ஓடு என் கை கபாலபாத்திரமாகப் போகிறது.

(எழுந்து சென்று பிக்குவைத் தாக்குகிறான்)

பிக்கு: ஓகோ! துக்கம். அநித்தியம்.7

பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள்! சந்நியாசி வேடம் பூண்ட இந்தப் போக்கிரிப்பயல் என்னுடைய