பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

69

நடராச வள்ளலின் இயக்கம் - திருக்கூத்து - ஓரிடத்தில் மட்டும் நிகழ்வதன்று. அஃது எங்கும் எங்கும் நிகழ்வது; நீக்கமற நிகழ்வது அம்பலமாவது அகில சராசரம்” என்றும். “எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்” என்றும் திருமந்திரம் முழங்குதல் காண்க.

66

இந்நூலாசிரியர் தோழர் சீனி. வேங்கடசாமி அவர்களை யான் நீண்ட காலமாக அறிவேன். அவர் சீர்திருத்தக்காரர்; ஆராய்ச்சியாளர்; காய்தல் உவத்தல் அகற்றி எதையும் நோக்குவோர். இவை உண்மை வேட்டலுக்குரிய பண்புகள் என்று சொல்லலும் வேண்டுமோ!

நமது நாட்டுக் கோயில்கள் தத்துவங்களின் ஓவியங்கள் இவ்வோவிய நுட்பங்கள். நாட்டுக் கல்வி அருகியுள்ள இந்நாளில். மக்கள் உள்ளத்தில் பெரிதும் படியாது கிடத்தல் வெள்ளிடை மலை. இது வறுமைக் காலத்தைக் குறிப்பதன்றோ?

இவ்வறிய காலத்தில் 'எழுவகைத் தாண்டவம்' என்னும் இந் நூலைத் தமிழ் நாட்டுக்கு உதவிய வேங்கடசாமியாரை எம்மொழியால் போற்றவல்லேன்! தமிழ் நாடு அவர்க்குக் கடமைப்படுவதாக! இவ் விழுமிய நூலை வறுமை போக்குஞ் செல்வக் கலை என்று கூறல் மிகையாகாது.

இந்நூலாசிரியர் நடராஜ ஓவிய நுண்மைகளையும். தாண்டவத் திறங்களையும். இன்ன பிறவற்றையும் விளக்க ஏற்ற உழைப்பு நூற்கண் நன்கு புலனாகிறது. அவர்தம் உள்ளம் சிவமாந் தன்மை எய்தியதென்றும். அவர் பிறவிப் பயனைப் பெற்றாரென்றும் கூற என் மனம் எழுகிறது.

-

இந்நூல், அறிவு - அன்பு -அருள் - அடக்கம் பொறுமை கருவிகரண ஓய்வு முதலியவற்றைப் பெருக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதை அனுபவத்திற் காணலாம். இத்தகைய நூல்களே நாட்டைச் செம்மை நெறியில் வளர்க்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். காலத்துக் கேற்ற நூலை நல்கிய கலைஞர் வாழ்க! அவர்தம் முயற்சி வெல்க!

தமிழ்ப் பெரியார்,

திரு.வி. கலியாணசுந்தரனார்