பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

5. அருளல் (அநுக்கிரகம்)

77

மாசு நீங்கித் தூய்மையடைந்த உயிருக்கு வீடுபேறு (மோட்சம்) அளித்தல்: ஆன்மா தூய தன்மை பெற்றுள்ள இன்பநிலை.

சிவப்பிரகாச உரையாசிரியர் இதனை இவ்வாறு விளக்குகிறார்.

66

ஆன்மாக்களைத் தனது திருவடியிலே கூட்டிக்கொள்வதுதான் அனுக்கிரகமாக இருக்கும். இவ்வனுக் கிரகமின்றி முன் சொல்லப்பட்ட சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம் என்னப்பட்ட நாலும் தனது திரு வடியிலே கூட்டிக்கொள்ளுகை நிமித்தமாக மலபரிபாகம் வருத்துகிற அனுக்கிரகமேயொழிய மற்றொன்றாகச் சொல்லவொண்ணாது.’

சிவஞான பாடியம் இதை இவ்வாறு விளக்குகிறது.

66

و

'ஆதித்தன், முன்பு முகிற்படலத்துள் மறைந்து தனது ஒளி சங்கோசமாய்ச் (சுருக்கமாய்ச்) சிறிதே விளக்கிப் பின்பு அம் முகிற் படலத்தை வாயுத் துரப்ப அதனால் அது சக்தி மடங்கிவிட்டு நீங்கியவழி அவ்வொளிதானே எங்கணும் விகாசமுமாய் (விரிவாய்) விளங்கும் முறைமைபோல, ஆன்மாவும் முன்பு மலத்தில் மறைப்புண்டு தன் னறிவு ஏகதேசமாய்ச் சிறிதே விளங்கிப் பிரபஞ்ச விடயத்தை அறிந்து அதில் அழுந்தும்; பின்பு முதல்வன் திருவருள் அம்மல சக்தியைக் கெடுத்தடக்கியவழி அவ்வறிவே பூரணமாய் விளங்கிக் கப்பின்றி அம் முதல்வன் திருவடியைத் தலைப்பட்டு அந்த ஞேயத்தில் அழுந்தும்

9910

உயிர்களில் படிந்து அவற்றை மங்கச் செய்து கொண்டிருக்கும் மலங்களை நீக்கி, அவற்றிற்குச் செம்மை நிலையாகிய சிவபதத்தை அளிப்பதுதான் அருளல் என்னும் செயலாகும்.

இவையே ஐந்தொழிலாம். இவ்வைந்தொழில்களில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்னும் மூன்று செயல்களும் மலத்தினிடத்தே நிகழும். மறைத்தல், அருளல் என்னும் இரண்டு செயல்களும் உயிர்களிடத்தில் நிகழும்.

3. ஐஞ்செயல் நோக்கம்

முன்னமே கூறியபடி, ஆன்மாக்களிலே படிந்து அவற்றின் தூய்மையையும் ஒளியையும் மறைத்துக் கொண்டிருக்கிற அழுக்கைப் போக்கித் தூய்மைப்படுத்தி, அவற்றை வீடுபேறடையச் செய்வதே கடவுள் செய்கிற ஐந்தொழிலின் நோக்கமாகும்.