பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

கத்திகைக் குழலி! ஆலங்

காட்டினிற் காளி தாண்ட

வத்தை நன்கியற்று கிற்போம்

இரத்தின சபையில் மாதோ.

66

தாம்பிர சபையில் தேவதாருவன நெல்வேலி

ஆம்பிர பலதலத்தில் ஆற்றுதும் முனிநிருத்தம்

994

காம்பிரங் குறுதோளீ! சங்கார தாண்டவத்தை யாவும், கூம்பிரவதனில் நின்று குலவுற இயற்றுகிற்போம்.

தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திர சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.5

இதனால் பஞ்ச கிருத்தியங்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.

சாத்திரக் கூற்று

இங்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. சிவபெருமான் செய்தருளுவது பஞ்ச கிருத்தியம் எனப்படும் ஐந்து செயல்தானே? ஆகவே, அவர் செய்யும் தாண்டவமும் ஐந்தாகத் தானே இருக்கவேண்டும்? ஏழாக இருப்பதேன்? இதற்குக் காரணம் யாது? ஐந்தாக இருக்கவேண்டியது எப்படி ஏழாயிற்று? இதற்கு விடை யாது?

சிந்தித்துப் பார்ப்போம். ஐஞ்செயலையும் தனித்தனியே காட்டுகின்ற தாண்டவங்கள் ஐந்து; ஐஞ்செயலையும் ஒருங்கே செய்கிற ஆனந்த தாண்டவம் (நடராச உருவம்) ஒன்று. ஆக, தாண்டவங்கள் ஆறு. அப்படியானால் ஏழாவது தாண்டவம் எந்தச் செயலைக் குறிக்கிறது?

இக்கேள்விக்கு விடை கண்டிலேன். அறிஞர்களைக் கேட்டேன்; விடை பெற்றிலேன். புராணச் சைவர்களும், சித்தாந்தச் சைவர்களும், ஆகமச் சைவர்களும், சிற்பிகளும் விடை கூறாமற்போகவே, மீண்டும் நூலில் புகுந்து விடை தேடினேன். திங்கள் பல கழிந்தன. இந்த ஓர்