பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
99
திரும்பி வந்தான். வந்தவன், கனக விசையரைச் சிறைப்பிடித்து வந்ததைப் பாராட்டாமல் சோழனும் பாண்டியனும் இகழ்ந்து பேசினதைத் தெரிவித்தான். அது கேட்ட செங்குட்டுவன் சினங்கொண்டு அவர்கள் மேல் போருக்குச் செல்ல எண்ணினான்.
அவ்வமயம் அருகிலிருந்த மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனின் சினத்தைத் தணிக்கச் சில செய்திகளைக் கூறினான். “உனக்கு முன்பு அரசாண்ட உன்னுடைய முன்னோர் பெருவீரர்களாக இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மாய்ந்து மாண்டு போனார்கள். அது மட்டுமா? உன்னுடைய தாயாதித் தம்பியும் அத் தம்பி மகனுங்கூட முன்னமே இறந்து போனார்கள். ஆகவே, சினத்தைவிட்டு மறக்கள வேள்வி செய்யாமல், அறக்கள வேள்வி செய்க” என்று கூறினான். இவ்வாறு கூறியவன் இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போன செய்தியையும் கூறினான்.
“சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
(சிலம்பு, நடுகல் 147 -150)
இதில், “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன்” என்றது இளஞ்சேரல் இரும்பொறையை. இளஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய தாயாதிப் பெரிய தந்தையான சேரன் செங்குட்டுவன் இருக்கும்போதே, அவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமேயே இறந்து போனான் என்பது நன்கு தெரிகின்றது. இந்த உண்மையை யறியாமல் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இளஞ்சேரல் இரும்பொறை வாழ்ந்திருந்தான் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுவது தவறாகும். செங்குட்டுவன் உத்தேசமாக கி.பி. 180 லும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசம் கி.பி. 190 இலும் இருந்தனர் என்று இவர் எழுதியுள்ளார்.[1] செங்குட்டுவன் காலத்திலேயே இறந்து போன குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகும் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்த காலத்தில் இவன் இல்லை.
- ↑ 10