பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 கணைக்கால் இரும்பொறை

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறைக்குப் பிறகு கொங்குநாட்டை யரசாண்டவன் கணைக்கால் இரும்பொறை. இவன், முன்னவனுக்கு எந்த முறையில் உறவினன் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றிய முழுவரலாறுந் தெரியவில்லை. கொங்குச் சேரரின் துறைமுகமாகிய தொண்டிப்பட்டினத்தின் கோட்டைக் கதவில் கணைக்காலிரும்பொறை, தனக்கு அடங்காத மூவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தான் என்று அப்பட்டினத்திலிருந்த கணைக்காலிரும்பொறையின் புலவர் பொய்கையார் கூறுகிறார்.[1]

இவன் காலத்தில் சோழ நாட்டை அரசாண்டவன் செங்கணான் என்பவன். செங்கட்சோழன் என்றும் இவனைக் கூறுவர். செங்கட் சோழன் பாண்டியனையும் கொங்குச் சேரரையும் வென்று அரசாண்டான். சோழ நாட்டுப் போர் (திருப்போர்ப்புரம்) என்னும் ஊரில் செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் கணைக்காலிரும்பொறை தோல்வியடைந்ததுமல்லாமல் சோழனால் சிறைப்பிடிக்கப்பட்டுக் குடவாயில் (கும்பகோணம்) சிறையில் வைக்கப்பட்டான். அப்போது கணைக்காலிரும்பொறையின் புலவராகிய பொய்கையார் இவனை விடுவிப்பதற்காகச் செங்கட்சோழன்மேல் களவழி நாற்பது என்னும் நூலைப் பாடினார்.

குடவாயிற் சிறைச்சாலையிலிருந்த கணைக்காலிரும் பொறை நீர் வேட்கை கொண்டு ‘தண்ணீர் தா’ என்று கேட்டபோது சிறைச் சாலையிலிருந்தவர் உடனே தண்ணீர் தராமல் காலங்கழித்துக் கொடுத்தனர். கணைக்காலிரும்பொறை அந்நீரை யுண்ணாமல் ஒரு செய்யுளைப் பாடித் துஞ்சினான் (துஞ்சினான் - உறங்கினான்). அந்தச் செய்யுள் புறநானூற்றில்74ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அச்செய்யுள் இது:


“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்.
தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

  1. 1