பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
225
காலவாபி என்னும் இடத்திலே அக்கபோதி அழைத்துவந்த தமிழச்சேனையை ஜேட்டதிஸ்ஸனுடன் போர்செய்து அவனைக் கொல்ல முயற்சித்தான். வெலுப்பனால் தான் உயிர் இழப்பது உறுதி யென்றறிந்த ஜேட்டதிஸ்ஸன் தன் உடைவாளினால் தன்னைத்தானே குத்திக் கொண்டு இறந்தான். ஆகவே அக்கபோதி மறுைபடியும், இரண்டாம் முறையாகத் தமிழப்படையின் உதவியினால் இலங்கைக்கு அரசனானான். இவன் அழைத்துவந்த தமிழப் படையினரில் பெரும்பாலோர் அநுராதபுரத்திலே தங்கிவிட்டார்கள். இவன் முன் போலவே தன் தம்பியாகிய மானா என்பவனைத் துணைவேந்தனாக்கி இலங்கையை அரசாண்டான். ஆனால், மானா அரண்மனையின் அந்தப்புரத்திலே கூடாபொழுக்கமாக நடந்துகொண்டபடியால்அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். ஆகவே மற்றொரு தம்பியாகிய கஸ்ஸபன் என்பவனைத் துணை வேந்தனாக்கினான்.
போர்க்களத்திலே உயிரைவிட்ட ஜேட்டதிஸ்ஸனுடைய அமைச்சனான தாட்டாசிவன், தன்னுடைய அரசன் இறந்துவிட்ட படியாலும், அக்கபோதி வெற்றியடைந்தபடியாலும் தனஙககு இலங்கையில் செல்வாக்கு இல்லையென்பதையறிந்து தமிழ் நாட்டில் சென்று அடைக்கலம் புகுந்தான் அடைக்கலம் புகுந்த தாட்டாசிவன் அக்க போதியை வென்று இலங்கையரசைத் தான் அடைவதற்குச் சமயம் பார்த்திருந்தான். இச்சமயத்தில் மானா என்னும் உபராசன் கொல்லப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்டு உடனே புதியதோர் தமிழச்சேனைகளை அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்திற்கு அருகில் உள்ள திந்திணி என்னும் ஊரில் பாசறை யமைத்தான்.
தாட்டாசிவன் தமிழப்படையுடன் தமிழ்நாட்டிலிருந்து போருக்கு வந்த செய்தியை அறிந்த அக்கபோதி, சேனையுடன் சென்று அவனுடன் போர்செய்தான். இந்தப் போரில் தாட்டாசிவன் வெற்றி யடைந்து அக்க போதி தோல்வுயுற்றான். தோல்வியடைந்த அக்க போதி, முடி முதலிய அரச சின்னங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏகா வலி என்னும் பெயருள்ள முத்துமாலை ஒன்றைமட்டும் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடினான். தமிழச் சேனையினால் வெற்றிபெற்று அரசாட்சியைக் கைப்பற்றிய தாட்டாசிவன், ஏகாவலி என்னும் முத்துவடம் ஒன்று தவிர மற்ற அரச சின்னங்களை அணிந்து இலங்கையின் அரசனானான். அரசனான பிறகு தாட்டாசிவன்தன்