பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



“விளைக்கின்ற வினையை நோக்கி
வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்
திருவடி பரவ மாட்டாது
இளைக்கின்றேன் இருமி யூன்றி
என்செய்வான் தோன்றி னேனே.”
(குறைந்த திரு நேரிசை.)

“தயைவிழ் கோதை நல்லார்
தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
என் செய்வான் தோன்றினேனே.”
(குறைந்த திருநேரிசை.)

தடியொடுங்கி வந்தடைந்தேன்
ஒழிப்பாய் பிழைப்ப வெல்லாம்.
(திருவாரூர்.2)

என்று இவரே தம்மைப்பற்றிக் கூறுவது காண்க. இவ்வாறாக, சமண சமயத்தைவிட்டுச் சைவமதத்தைச் சேர்ந்த பின்னர், திருநாவுக்கரசர் திருமணம் செய்து கொண்டு மக்களைப் பெற்றுக் குடும்பத்தோடு வாழ்ந்திருந்து பின்னர் மீண்டுந் துறவுபூண்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக்காரர் எழுதுகிறார்.1

இதற்கு இவர் காட்டும் சான்று என்ன வென்றால்,

“மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் தலம தோரேன்.”

என்னும் குறைந்த நேரிசை (உ) செய்யுளாகும். இதனை ஆதார மாகக் கொண்டு, நாவுக்கரச்ர திருமணம் செய்து கொண்டு பிள்ளைப் பேற்றுடன் வாழ்ந்தார் என்று இவர் கூறுவது பொருந்தாது. நாவுக்கரசர் திருமணஞ்செய்து கொண்டார் என்று பெரியபுராணம் கூறவில்லை. மேலும் இளமை கழிந்த முதிய வயதில் இவர் சைவரானார் என்பதே


[1]

  1. 1. Origin and early History of Saivism in South India. by C. V. Narayana Ayyar, Page, 390.