பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

235


துணிபு. திருமணஞ்செய்து இல்லறத்தில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு இவர் மேற்கோள் காட்டுகிற அதே குறைந்த நேரிசைப் பதிகத்தின் கூ ஆவது பாடலில்,

“தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லே னெந்தாய் என் செய்வான் தோன்றி னேனே.

என்று கூறுவது இக்கருத்துக்கு மாறுபடுகிறது.

நாவுக்கரசர் சமணசமயத்தைவிட்டுச் சைவசமயத்துக் வந்த பின்னர்த் திருமணஞ்செய்து கொண்டிருந்தால், அதனைத் தவறாமல் பெரியபுராணம் கூறுமன்றோ? அவ்வாறு கூறாதபடியினாலும், சைவ சமயத்துக்கு வந்த போது முதிய வயதினராகையினாலும் இவர் திருமணஞ் செய்து கொண்டார் என்பது சிறிதும் பொருந்தாது. அப்படியானால், நாவுக்கரசர் வாக்கினாலேயே அகச்சான்று இருக்கிறதே; ஆகவே, மணம் செய்து கொண்டார் என்பது உண்மைதானே என்று மக்கள் கருதுவர். அவ்வாறு கருதுவது தவறு அடியார்கள், மனவிை மக்கள் இல்லாதவர்களாயிருந்தாலும் குடும்பப்பாசம் உடையவர் போல ஆண்டவனிடம் முறையிடுவது மரபு. இந்த மரபையொட்டிப் பாடிய ஒரு செய்யுளை மட்டும் ஆதாரங் காட்டி இவர் மணஞ்செய்து கொண்டு வாழ்ந்தார் என்று கூறுவது பொருந்தாது. ஏனைய சான்றுகள், மணஞ்செய்து கொண்டார் என்பதற்கு மாறுபடுகின்றன. கனி மரப் பாராமல், ஏனைய சான்றுகளையும் ஆராயாமல் ஏதோ ஓர் ஆதாரத்தை மட்டும் மேற்கோள் காட்டி ஒரு கருத்தை நிலை நாட்ட "ஆராய்ச்சி” யாளர்கள் முற்படுவார்களாகும். அது பெருங்கேடாக முடியும். உதாரணமாக ஒன்று கூறுவோம்:

காரைக்கால் அம்மையார் என்பவர் பெண்பாலார் என்பதும் எல்லோரும் அறிந்த செய்தி. இவ்வம்மையார் இயற்றியுள்ள திரு விரட்டை மணிமாலையில்,

“நினையா தொழுதிகண் டாய்நெஞ்ச மேயங்கோர் தஞ்சமென்று
மனையா ளையுமக்க டம்மையுந் தேறியோ ராறுபுக்கும்
நனையாச் சடைமுடி நம்பனந் தாதைநொந் தாதசெந்தீ
யனையா னமார் பிரானண்ட வாண னடித்தலமே.”

என்று பாடியுள்ளார். பெண்பாலாராகிய அம்மையார், இப்பாடலில் மனையாளையும் மக்கள் தம்மையும் என்று கூறியுள்ளது கொண்டு,