பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கூறும் கருத்து என்னவென்ன வென்றால், அவன் நாக பரம்பரையினரான பல்லவ அரசர்களோடு வளர்ந்தான் என்பதே. இந்த நிருபகேசரி, சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காலத்திலும் அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் இருந்தவன் என்று தெரிகிறான்.

நிருபகேசரியின் மகன் பரதுர்க்க மர்த்தனன் என்பவன். இவனுக்கு வரதரபிஜித் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. வாதாபிஜித் என்றால், வாதாபி நகரத்தை வன்றவன் என்பது பொருள். பரதுர்க்க மர்த்தனனுடைய மகன் சமராபிராமன் என்பவன். இவன், யதுவம்சகேது என்றும், சோழன்மகளான அநுபமை என்பவனை மணந்தவன் என்றும் கூறப்படுகிறான். அன்றியும் அதிராசமங்கலத்தில் சளுக்கியனை வென்றவன் என்றும் கூறப்படுகிறான்.

கொடும்பாளூர் அரசர்களாகிய பரதுர்க்க மர்த்தனனும், அவன் மகன் சமராபிராமனும் மாமல்லனான் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவர்கள். அன்றியும் அவனுக்கு நண்பராகவும் இருந்தவர்கள். நரசிம்மவர்மன் மீது சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி படை யெடுத்து வந்தபோது, அவனை நரசிம்மவர்மன் போரில்கொன்று, பிறகு அவனுடைய வாதாபி நகரத்தின்மேல் படையெடுத்துச் சென்று அந் நகரைக் கைப்பற்றிக்கொண்டு, வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று பெயர்பெற்றான் என்று சரித்திரம் கூறுகிறது. புலிகேசியுடன் நரசிம்ம வர்மன் போர்செய்தபோது, கொடும்பாளூர் அரசனான சமராபிராமனும் பல்லவனுடன் சேர்ந்து சளுக்கியனான புலிகேசியை வென்றான் போலும். ஆகவே, இவன் சளுக்கியனை வென்றவன் என்று பெயர்பெற்றான்.

இவனுடைய தந்தையாகிய பரதுர்க்கமர்த்தனன், நரசிம்மவர்மன் சார்பாக வாதாபி நகரப்போரில் கலந்துகொண்டு வாதாபிநகரத்தை வென்று "வாதாபிஸ்ரீத்" என்னும் பெயரையும் பெற்றான். இதனால், கொடும் பாளூர் அரசர்களாகிய இவர்கள், நரசிம்மவர்மன், புலிகேசியை வெல்வதற்குத் துணையாக இருந்தார்கள் என்பது தெரிகிறது.

இது இன்னொரு விதத்திலும் உறுதிப்படுகிறது. புலிகேசியின் மகனான முதலாம் விக்ரமாதித்தியன், தன் தந்தையான புலிகேசியின் இராச்சியத்தின் தென்பகுதியை மூன்று அரசர்கள் சேர்ந்து கைப்பற்றினார்கள் என்று தன் சாசனம் ஒன்றில் கூறுகிறான். அப்படியானால் புலிகேசியை வென்றவர் மூன்று அரசர்கள் என்று தெரிகிறது. அம் மூவர் யாவர்? மாமல்லனான நரசிம்மவர்மன் ஒருவன். அவனுக்கு