262
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இவன் அரசியார் மங்கையர்க்கரசியார். இவர், பல்லவ அரசரின் ஞகழ் சிற்றரசராக இருந்த சோழ அரசனுடைய மகளார். குலச்சிறையார் என்பவர் இவ்வரசனின் அமைச்சர் இவ்வரசன், அரசி, அமைச்சன் ஆயி மூவரும், திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்று உபசரித்தார்கள். இம் மூவரும் சைவநாயன்மார் திருக்கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காணலாம்.
இவ்வரசனை, வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு
கூறுகிறது:
51. மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி உதய கிரி மத்யம
52. த்துறு சுடர்போலத் தெற்றென்று திசை நடுங்க மற்ற வன் வெளிற்பட்டுக்கு
53. ழியானை செலவுந் திப் பாழிவாய் அமர்கடந்து வில்வேலிக் கடற்றாணையை
54. நெல்வேலிச் செறுவென்றும் விரவிவந்தணையாத பர வரைப் பாழ்படுத்
55. துமறு காலினம் புடை திளைக்குங் குறுநாட்டவர் குலங் கெடுத்து
56.ங் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செறுவென்றும் பாரளவுந்
57. தனிச் செங்கோற் கேரளனைப் பலமுறை முரிமைச் சுற்றமோடவர் யானை
58. யும் புரிசைம்மதிற் புலியூர்ப் பகனாழிகை இறவாமை இகலா 59. ழியுள் வென்று கொடும் வேலாழியும் வியன் பரம்புமே லாமை சென்
60.றெறிந் தழித்தும் ஹிரண்ய கர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்து
61. அந்தணற்கும் அசக்தற்கும் வந்தணைக என்றீத்தளித்த மகரிகை அணிமணி
62. நெடுமுடி அரிகேசரி அசமசமன்ஸ்ரீமாறவர்மன்"...6