பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


இவர்களுடன் நட்புடையவர். இவர் இயற்றிய இயற்பா - மூன்றாந்திருவந்தாதி, அந்தாதித் தொடையில் நூறு வெண்பாக்களாலானது.

சைவ சமயத்தவராக இருந்த திருமழிசையாழ்வாரை வைணவ சமயத்தில் சேர்த்துத் திருமாலடியாராகத் திகழச்செய்தவர் பேயாழ்வார். அதுபற்றி,

“பெருக்க முடன் திருமிழிசைப்
பிரான் தொழுவோன் வாழியே.”

என்று வைணவர்கள் இவரை வாழ்த்துவது வழக்கம்.

திருமழிசையாழ்வார்

தொண்டை நாட்டிலே திருமிழிசை என்னும் ஊரில் பிறந்தவர். ஆகையினாலே இவருக்குத் திருமழிசையாழ்வார் என்று பெயர் அமைந்தது. இளமையில் கல்விகற்றுத் தேர்ந்து, திருநாவுக்கரசரைப் போலவே, பல சமயங்களை ஆராய்ந்தவர். அதன் பயனாகச் சிலகாலம் பௌத்தராகவும் சில காலம் சமணராகவும் இருந்து பிறகு சைவ சமயத்தில் சேர்ந்து சிவவாக்கியர்1 என்னும் பெயர் பூண்டிருந்தார்.

இவர் சைவ சமயத்தவராக இருந்த காலத்தில், பேயாழ்வார் இவரை வைணவராக்கித் திருமால் பக்தராகச் செய்தார் என்றும், வைணவராகி இவர் யோகத்தில் அமர்ந்திருந்தபோது முதலாழ்வார்கள் மூவரும்வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார்கள் என்றும் இவருடைய வரலாறு கூறுகிறது. இவருக்குப் பக்திசாரர் என்று வேறுபெயரும் உண்டு.

இவர் காஞ்சீபுரஞ்சென்று திருவெஃகா என்னும் திருப்பதியில் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டிருந்தார். அக்காலத்தில், கணிகண்ணன் என்பவர் இவரிடம் வந்து சீடராக அமர்ந்து இவருக்கும் தொண்டுசெய்திருந்தார். காஞ்சி நகரத்திலிருந்து பல்லவ அரசனுடைய அரண்மனைக்குக் கணிகண்ணர் பிச்சைக்காகச் செல்வதுண்டு. ஒரு செய்யுள் பாடச் சொன்னான். அவர் அரசனைப்பாடாமல் காஞ்சி நகரத்தைப் பாடினார். அதனால் சினங்கொண்ட பல்லவ மன்னன் அவரை ஊரைவிட்டுப் போகும்படி சொன்னான்.

அவரும் ஆழ்வாரிடம் வந்து நடந்ததைக்கூறித் தனக்கு விடைகொடுக்க வேண்டும் என்று கேட்டார். ஆழ்வார், தாமும் அவருடன்