308
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
பகைவர்களைக் கொன்று, மற்றவர்களால் கைப்பற்ற முடியாத அரசாட்சியைக் கைப்பற்றினான்.”[1]
தந்திவர்மன் அரசாண்ட காலத்தில், வரகுண பாண்டியன், பல்லவ இராச்சியத்தின் தென் பகுதியாகிய சோழ நாட்டின்மேல் படையெடுத்து வந்து, சோழநாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே, பல்லவ இராச்சியத்துக்குட்பட்டிருந்த சோழ நாடு பாண்டியன் வசமாயிற்று. தந்திவர்மன் காலஞ்சென்ற பிறகு, அவன் மகனான நந்திவர்மன் அரசனானான்.
பல்லவ அரசர் பரம்பரை
நந்திவர்மன் I
│
சிம்ம விஷ்ணு பீம வர்மன்
││
மகேந்திர வர்மன் I புத்த வர்மன்
││
நரசிம்ம வர்மன் I ஆதித்ய வர்மன்
(மாமல்லன்) │
┌┴───────────────┬கோவிந்த வர்மன்
மகேந்திரவர்மன் II பரமேசுவரவர்மன் I │
│இரணிய வர்மன்
நரசிம்ம வர்மன் II │
(இராஜசிம்மன்)நந்திவர்மன் II
┌──────────────┴(பல்லவ மல்லன்)
மகேந்திர வர்மன் III பரமேசுவர வர்மன் II │
தந்தி வர்மன்
│
நந்தி வர்மன் III
(தெள்ளாறெறிந்தவன்)
பகைவரும் நண்பரும் மூன்றாம் நந்திவர்மன் அரசாட்சியை ஏற்றுக்கொண்டவுடன் பல பகையரசருடன் போர் செய்ய நேரிட்டது. மேலே கூறியபடி, பல்லவ இராச்சியத்துக்குட்பட்டிருந்த சோழநாட்டை வரகுண பாண்டியன் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக் கொண்டு, தொண்டை நாட்டையும்
- ↑ 1