பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

337


அவன் மகன் பரசக்கர கோலாகலன் ஆகிய ஸ்ரீ மாறனும் அரசாண்டார்கள்.

நெடுமாறன் யார்?

இக்காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவதிககைத் திருவீரட்டானப் பதிகத்தில் நெடுமாறன் என்று குறிப்பிடுவது வரகுண மகாராசனைத்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் வரகுண மகாராசனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு. இந்த மாறனைத்தான் நெடுமாறன் என்று சுந்தரர் கூறுகிறார் போலும்.

“பொன்னானை மயிலூர்தி முருகவேள்தாதை பொடியோடுந் திருமேனி நெடுமாறன் முடிமேற் றென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் சேராத சிந்தையான் செக்கர் வானந்தி.”[1] என்று அவர் கூறுவது காண்க.

வரகுண பாண்டியனாகிய நெடுமாறன் சோழ நாட்டையும் இலங்கைத் தீவையும் வென்று அரசாண்டபடியாலும் சிறந்த சிவபக்தன் ஆனமையினாலும் அவனைச் சுந்தரர் “பொடியாடுந் திருமேனி நெடுமாறன்” என்று கூறினார் என்று கருதலாம்.

சேரநாடு

சேரமான் பெருமாள்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சேரநாட்டையாண்ட அரசர் யார் என்பது சாசனங்கள் மூலமாகத் தெரியவில்லை. ஆனால், இக்காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனாருடன் சேரமான் பெருமாள் என்னும் சேர அரசன் நண்பராக இருந்தார் என்று தெரிகிறபடியால், அந்தச் சேரமான் பெருமாள் சேரநாட்டையரசாண்டார் என்று கொள்ளலாம். இந்தச் சேரமான் பெருமாளுக்குப் பெருமாக்கோதையார் என்றும் கழறிற்றறிவார் என்றும் பெயர்கள் உண்டு.[2] திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகரமாகக்கொண்டு இவர் அரசாண்டான்.[3]

சேர அரசன் குடியில் பிறந்த இவர் திருவஞ்சைக் களத்தில் இருந்த சிவன் கோயிலில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தார். மிகுந்த சிவபக்தர், சைவ நாயன்மார் அறுபத்துமூவரில் இருவரும்

  1. 21
  2. 22
  3. 23