பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

353



"கால காலனைக் கம்பனெம்மானைகாணக்
 கண்ணடியேன் பெற்ற வாறே"

என்று கூறுகிறார்.

பின்னர், திருவாரூர் சென்று ஒரு கண் பார்வையில்லாமல் இருப்பதைக் கூறிப் பதிகம் பாடினார்.

"மீளாவடிமை உமக்கே ஆளாய்ப் பிறரைவேண்டாதே
முளாத் துப்போல் உள்ளே களன்று முகத்தான் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால்
 வாளாங் கிருப்பீர், திருவாரூரீர், வாழ்ந்து போதீரே."

"ஏற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் ஞநரே பழிபட்டீர்
 மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே"

"என்றும் முட்டாப் பாடுமடியார் தங்கண் காணாது
 குன்றின் முட்டிக் குழியின் வீழ்ந்தால் வாழ்ந்து போதீரே"

"சந்தம் பலவும் பாடு மடியார் தங்கண் காணாது
 வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே."

"பாரூ ரறிய என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர்
 வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதுரே"

அப்போது, இறைவன் அருளால் மற்றக்கண் படலம் நீங்கிப் பார்வை தெரிந்தது. அக்காலத்தில், கலிக்காம நாயனார் என்னும் தொண்டருடன் நண்பரானார்.

சேரநாட்டை அரசாண்ட சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி நாயனாரைக் காண்பதற்காகத் திருவாரூருக்கு வந்தார். சுந்தரர் அவருடன் நட்பு கொண்டு இருவரும் தல யாத்திரை செய்யப் புறப்பட்டுப் பாண்டிநாடு சென்று அந்நாட்டுத் தலங்களை வணங் கினார்கள். பின்னர் பாண்டிய மன்னன் அரண்மனையில் தங்கினார்கள். அங்கே, பாண்டியன் மகளைத் திருமணஞ் செய்து கொண்ட சோழ அரசன் தங்கியிருந்தான். இவர்கள் நால்வரும் திருப்பரங்குன்றம் சென்று கடவுள் வழிபாடு செய்தார்கள். அவ்வமயம் சுந்தரர், “திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும்” என்னும் பதிகம் பாடினார். அப்பதிகத்தின்