பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கடைசியிலே, தமிழ்நாட்டுப் பழைய முடியுடை வேந்தர் மூவரும் ஒருங்கிருப்பதைக் குறிப்பிட்டுப் பாடினார். அச்செய்யுள் இது :

“அடிகேள் உமக்காட்செய அஞ்சுதும்
        என்றமரர் பெருமானை ஆரூரனஞ்சி
முடியா லுலகாண்ட ஓர்நான்கும் ஒரோன்றினையும்
        படியா யிவைகற்று வல்ல வடியார்
பரங்குன்ற மேய பரமனடிக்கே
        குடியாகி வானோர்க்குமோர் கோவு மாகிக்
குலவேந்தராய் விண்முழு தாள்பவரே”

பாண்டிய நாட்டிலிருந்து வந்த பிறகு சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தியைத் தமது சேர நாட்டுக்கு அழைத்துச் சென்றார். சேர நாட்டில் சிலநாள் தங்கிய பிறகு சுந்தரர் மீண்டும் திருவாரூருக்கு வந்தார். சிலநாட்கள் சென்ற பிறகு, சுந்தரமூர்த்தி நாயனார் மீண்டும் சேர நாடு சென்று சேரமான் பெருமாளுடன் தங்கினார். தங்கியிருந்தபோது, இவ்வுலக வாழ்வை விட்டு வெள்ளையானை ஏறித் திருக்கயிலாயஞ் சென்று சிவகதி பெற்றனர். அவ்வமயம் அவர் பாடிய [1]திருநொடித்தான் மலைப் பதிகத்தில் வெள்ளை யானைமீது ஏறிச் சென்றதைக் கூறுகிறார்.

“வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே.”

“விண்ணுல கத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.”

“இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமா முனிவர் இவனாரென் எம்பெருமான்
நந்தமர் ஊரனொன்றான் நொடித்தான்மலை உத்தமனே.”

“இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லம்
வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமா முனிவர் இவனாரென் எம்பெருமான்
நந்தமர் ஊரனொன்றான் நொடித்தான்மலை உத்தமனே.”

  1. 18