பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



இவர் யானையேறி நகர்வலம் செய்தபோது, ஒருவண்ணான் உவர் மண்ணைச் சுமந்துகொண்டு எதிரிலே வந்தான். அவன் உடல் முழுவதும் உவர்மண் படிந்து நீறு பூசியது போலக் காணப்பட்டது. அவனைக் கண்ட சேரமான் பெருமாள் அவனைச் சிவனடியார் என்று நினைத்து, யானையினின்று இறங்கிவந்து வணங்கினார். வண்ணான் அச்சங்கொண்டு, அரசரை வணங்கி, “அடியேனை யாரெனக் கொண்டது! அடியேன் அடிவண்ணான்” என்று கூறினான். பெருமாளும், “அடியேன் அடிச் சேரன். திருநீற்று வேடத்தை நினைப்பித்துர்! வருந்தாமல் போம்” என்று விடையிறுத்தார். இதனால், இவருடையட சிவசமயப் பற்று நன்கு விளங்குகிறது.

மதுரைச் சொக்கநாதப் பெருமான் அனுப்பிய திருமுகப் பாசுரத்தின்படி, இவர் தம்மிடம் வந்த பாணபத்திரன் என்னும் இசைவாணருக்குப் பொருநிதி அளித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் சிவபக்தியினைக் கேள்வியுற்று, அவரைக் காணவேண்டும் என்னும் விருப்பத்தினால் திருவாரூக்கு வந்தார். வரும் வழியில் சிதம்பரத்தில் தங்கிக் கூத்தப்பெருமானை வணங்கிப் பொன்வண்ணத் தந்தாதி என்னும் நூலை இயற்றி அரங்கேற்றினார். பின்னர்த் திருவாரூரை அடைந்து சுந்தரமூர்த்தி நாயனாரால் வரவேற்கப்பட்டு அங்குத் தங்கி தியாகப்பெருமானை வணங்கினார். அக்காலத்தில், திருவாரூர் மும்மணிக் கோவை என்னும் நூலை இயற்றித் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் முன்னிலையில் அரங்கேற்றினார். பிறகு, சுந்தரருடன் வேதாணியம் சென்று, இறைவனை வணங்கிச் சிவபெருமான்மேல் ஒரு அந்தாதி பாடினார். அந்த அந்தாதி இப்போது கிடைக்கவில்லை. பிறகு, பாண்டிய நாட்டில் சுந்தரரோடு தலயாத்திரை செய்து திரும்பி வந்து திருவாரூரில் தங்கினார். சிலநாட்களுக்குப் பிறகு, சுந்தரரை அழைத்துக்கொண்டு தமது ஊருக்குச் சென்றார். சுந்தரர் சிலநாட்கள் கொடுங்கோளூரில் தங்கியிருந்து, மீண்டும் திருவாரூருக்கு வந்தார்.

நெடுநாள் ஆனபிறகு, சுந்தரமூர்த்தி நாயனார் மீண்டும் சேரமான் பெருமாளைக் காண்பதற்குக் கொடுங்கோளூர் சென்றார். அங்கிருந்தபோது திருக்கயிலாயத்திலிருந்து வெள்ளையானை வர, சுந்தரர் அதில்