பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
35
தலைநகரம் பொதினி. ஆவி (வையாவி) நாட்டையாண்ட அரசர்‘வேள்ஆவிக்கோமான்’ என்று பெயர் பெற்றனர்.3 பொதினி என்னும் பெயர் இப்போது பழனி என்று மருவி வழங்குகிறது. வேள்ஆவி அரசர்கள் சேர அரசர் பரம்பரையில் பெண்கொடுத்து உறவு கொண்டார்கள். வையாவிக்கோப்பெரும்பேகனும் வேள் ஆவிக் கோமான் பதுமனும் இவ்வூரை ஆண்ட அரசர்கள். வையாவிக் கோப்பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார், நல்லூர் நத்தத்தனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இதனால் இவர்கள் சம காலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது. வேளாவிக்கோமான் பதுமனுடைய மகள் ஒருத்தியைக் குடக்கோ நெடுஞ்சேரலன் மணஞ் செய்திருந்தான் (4ஆம் பத்துப் பதிகம், 6ஆம் பத்துப் பதிகம்). இன்னொரு மகளைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் (குடக்கோ நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பி) மணஞ் செய்திருந்தான் (8ஆம் பத்துப் பதிகம்).
கொல்லி மலையும் கொல்லிக் கூற்றமும்
கொங்கு நாட்டுப் பேர்போன கொல்லிமலையைச் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. கொல்லிமலையை இந்தக் காலத்தில் சதுரகிரி என்று பெயர் கூறுகிறார்கள். பார்வைக்குச் சதுர வடிவமாக அமைந்திருப்பதனால் சதுரகிரி என்று பெயர் பெற்றது. கொல்லிமலை, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்திலும் நாமக்கல் வட்டத்திலும் அடங்கியிருக்கின்றது. ஏறக்குறைய 180 சதுர மைல் பரப்புள்ளது. கொல்லிமலைகள், கடல் மட்டத்துக்கு மேலே 00 அடி முதல் 4000 அடி வரையில் உயரம் உள்ளன. கொல்லி மலைகளில் வேட்டைக்காரன் மலை (ஆத்தூர் வட்டம்) உயரமானது; அது கடல் மட்டத்துக்கு மேலே 4663 அடி உயரமாக இருக்கிறது.
கொல்லிமலைகளில் ஊர்கள் உள்ளன. பல அருவிகளும் உள்ளன. மலையிலேயே தினை, வரகு, ஐவன நெல் முதலிய தானியங்கள் பயிரிடப்பட்டன. மலைகளில் மூங்கிற் புதர்களும், சந்தனம், கருங்காலி, தேக்கு முதலிய மரங்களும் வளர்ந்தன. அக்காலத்தில் தேக்கு மரம் இல்லை. பலா மரங்கள் இருந்தன.4கொல்லிமலைத் தேன் பேர் போனது.
பிற்காலத்து நூலாகிய கொங்கு மண்டல சதகமும் கொல்லிமலையைக் கூறுகிறது.