பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



அடியேன் பெற்ற மக்களிவர் அடிமையாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுயக் கருணை அளிக்வேண்டும்

என்று வேண்டினார். சுந்தரர் அரனை மறுத்து, “இவர்கள் எனது மகளாகக் கடவர்” என்று கூறி, அவர்களைத் தமது குமாரத்திகளாக ஏற்றுக் கொண்டார்.[1] சுந்தரர், கோட்புலியாரையும் அவரது குமாரத்திகளையும் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

“கூடாமன்னரைக் கூட்டத்துவென்றகொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழல் சிங்கடியப்பன்
திருவாரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம் பற்றறுமே.”[2]

“நாணியூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்”.[3]

என்றும்,

“சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடியப்பன்”[4]

என்றும்,

இளங்கிளை யாரூரன் வனப்கை யவள் அப்பன்[5]

என்றும்,

“திருநாவலூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்”[6]

என்றும்,

“நறவம் பூம்பொழில் நாவலூரன்
        வனப்பகை யப்பன் சடையன்தன்
சிறுவன் வன்றென்ட னூரன் பாடிய
        பாடல பத்திவை வல்லவர்”[7]

என்றும்,

“செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்றெஞ்
  1. 24
  2. 25
  3. 26
  4. 27
  5. 28
  6. 29
  7. 30