பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

365



கழற்சிங்க நாயனார்

இவர் பல்லவ அரச குலத்தில் வந்த பல்லவ மன்னன். கழற்சிங்கன் என்பது இவருடைய சிறப்புப் பெயர். இவரே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆவர்.[1]

கழற்சிங்க நாயனார் ஒரு சமயம் மாதேவியோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினார். அவருடன் சென்ற அரசியார் அங்கிருந்த பூவொன்றைக் கையிலெடுத்து மோந்தார். அதனைக் கண்டு, அங்கிருந்த செருத்துணை நாயனார் சினங்கொண்டு, சிவபெருமானுடைய பூவை மோந்த மூக்கை அரிவேன் என்று கூறி, தம் கையிலிருந்த கத்தியினால் அவர் மூக்கை அரிந்தார். மாதேவியார் கூச்சலிட்டு அலறினார். உடனே கழற்சிங்கர் வந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று சினந்து கேட்டார். செருந்துணை நாயனார் தாமே இப்படிச் செய்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினார். அப்போது, கழற்சிங்கர், “மூக்கை அரிந்ததுமட்டும் போதாது; புவை எடுத்த கையையும் துண்டிக்க வேண்டும்” என்று கூறி வாளை எடுத்துத் தமது மனைவியாரின் கையைத் துண்டித்தார். இக் கதையைப் பெரியபுராணம் கழற்சிங்க நாயனார் புராணத்தில் காண்க.

சுந்தரமூர்த்தி நாயனார், இந்த நாயனாரைத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று சிறப்பித்திருக்கிறார்.

செருந்துணை நாயனார்

சோழ மண்டலத்து மருகல் நாட்டுத் தஞ்சாவூரிலே இருந்த சிவபக்தர் செருந்துணை நாயனார். இவர் திருவாரூர் திருக்கோயிலில் சென்று வன்மீக நாதரை வழிபட்டு அக்கோயிலில் திருத்தொண்டுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருநாள், கழற்சிங்க நாயனார் தமது மாதேவியாரோடு அக்கோயிலுக்கு வந்து கடவுளை வணங்கினார். அவருடன் வந்த மாதேவியார், கோயிலில் கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதனைக் கண்ட செருந்துணையார், சிவபெருமானுடைய

  1. 33