பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

401


செய்து முடித்தான். திருக்குறள் அரங்கேற்றமும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் என்பார் எழுதிய உரையும் இவனது அவையில் அரங்கேற்றப்பெற்றன என்பது செவிவழிச் செய்திகளாகும். நாஞ்சில் வள்ளுவன் இவன் காலத்தில் வாழ்ந்தவன்.[1]

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி[2]

சோழ அரசன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் இந்தப் பாண்டிய அரசனும் ஒருங்கிருக்கக் கண்ட புலவர் ஒருவர் இவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டுமென்று வாழ்த்துகிறார். இவர்கள் கூடியிருந்த இடம் சோழ நாட்டுத் தலைநகர் என்பது. புலவர் சோழனை முன்னிலைப்படுத்தியும் பாண்டியனைப் படர்க்கையில் குறிப்பிட்டும் பாடியிருப்பதிலிருந்து தெரிகிறது. இவ்வரசனைப் பாடிய புலவர். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும்[3] பிட்டங்கொற்றனையும் தனித்தனியே நேரில் கண்டு பாடியுள்ளார்.[4] பிட்டங்கொற்றன், சேர அரசன் கோதையின் படைத்தலைவன் என்பதும்[5] கோதை அல்லது கோதை மார்பன். கிள்ளி வளவனிடம் பழையன் மாறன் மதுரையில் தோற்றபோது மகிழ்ந்தான் என்பதும்[6] பல பாடல்களைத் திரட்டி அறியப்படும் சமகால நிகழ்ச்சிகள்.

இந் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எண்ணும்போது பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்காக மதுரையில் போரிட்டான். அச்சமயத்தில் பாண்டியநாட்டு அரியணையைப் பெறப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் உதவியை வேண்டினான். அப்போதுதான் சோழன் அவையில் இருவரையும் ஒருங்கு கண்டு புலவர் வாழ்த்தினார். பெருந்திருமா வளவன் குராப்பள்ளியில் துஞ்சியவன் என்பது அவனது பெயரால் தெளிவாகிறது.[7] அந்த அடைமொழியைக் கொண்ட கிள்ளிவளவன் என்பது இவனே ஆவான்.[8] திருமாவளவன் என்பது இச் சோழனின் இயற்பெயர். கிள்ளிவளவன் என்பது கிள்ளியின் மகன் வளவன் என்று விளங்கும் பெயர்.

கிள்ளிவளவன் தன்னை நாடிவந்து உதவி வேண்டிய வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிக்கு உதவினான். பாண்டியனின் கூடல் நகரத்தைத் தாக்கி வென்று, பெருவழுதிக்கு அளித்தான். இந்தப் பெருவழுதி மதுரையில் இருந்து அரசாண்டு வரும்போது, வெள்ளி-

  1. 102
  2. 103
  3. 104
  4. 105
  5. 106
  6. 107
  7. 108
  8. 109