பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

449


லிருந்து (இந்தியாவிலிருந்து) இலங்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள். இதனால், கந்தன் வழிபாடு தமிழ் நாட்டிலிருந்து கடல்கடந்து இலங்கைக்குச் சென்றது என்பது வலியுறுகின்றது.

இலங்கையில் கந்தனுடைய முக்கிய கோவில் கதிர்காமத்தில் இருக்கிறது. இலங்கையில் தென்கிழக்கே மாணிக்க கங்கை ஆற்றின் கரையிலே கதிர்காமம் அல்லது கதரகாமம் என்னும் இடம் இன்றும் பேர் பெற்றிருக்கிறது. இங்குக் கந்தனுக்கும் வள்ளிக்கும் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் திருவிழா நடக்கிறது. கதிர்காமக் கோவிலுக்கு அறுபதாயிரம் ஏக்கர் நிலம் உண்டு. இந்தக் கோவிலைச் சேர்ந்த காடுகளில், இலங்கை வேடர்களில் ஒரு இனத்தவாகிய கோவில் வனமை வேடர் என்பவர் வசித்து வந்தார்கள். இந்த வேடர்களின் முன்னோர், வள்ளியம்மையைக் குழந்தை உருவத்துடன் ஒரு வயலில் கண்டெடுத்து வளர்த்ததாகவும், வள்ளி வயதடைந்த பிறகு கந்தன் அவளை மணம் செய்து கொண்டதாகவும் இவ்வேடர்கள் கூறுகிறார்கள். இப்போது இவ்வேடர்கள் இங்கு இல்லை. கி.பி. 1886 இல் இவ்வேடர்களின் சந்ததியார் இங்குச் சிலர் இருந்ததாகவும் அவர்களும் மிகவும் வறுமையுற்றிருந்தனர் என்றும் ஒருவர் கூறுகிறார்.[1]

கதர்காமத்தெய்வம் (கந்தன்), வயலைக் காத்துக் கொண்டிருந்த வள்ளியின் முன்பு பசி தாகத்தினால் இளைத்த பண்டாரம்போல வந்ததாகவும், அப்போது அங்கு வந்த யானைக்கு அஞ்சிய வள்ளி அப்பண்டாரத்தினிடம் அடைக்கலம் புகுந்ததாகவும், பிறகு பண்டாரமாகிய கந்தன் வள்ளியை மணம் செய்ததாகவும் கூறுகின்றனர். இது தமிழ் நாட்டில் கூறப்படுகிற முருகன் கதையோடு மிகவும் பொருந்தியுள்ளது. கதிர்காமக் கோவிலுக்கு 4 மைல் தூரத்தில் ஒரு பாறைக் கல்லில் யானையினுடைய கால் அடையாளம் காணப்படுகிறது. அது வள்ளியைத் துரத்திவந்த யானையின் காலடி அடையாளம் என்று கூறப்படுகிறது.

கதிர்காம முருகனைப்பற்றி ஒரு கதை வழங்குகிறது. கதிர்காமத்துக்கு அருகில் ஒரு குன்றின்மேல் ஆதியில் முருகன் எழுந்தருளி இருந்ததாகவும், அவ்வழியாகச் செல்லும் தமிழர்களை முருகன் விளித்துத் தன்னைக் கீழே கொண்டுபோய் விடும்படி பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அத்தமிழர்கள் அதற்கு

  1. 1