492
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
ஐந்நூறு பௌத்தப் பிக்குகளின் சேனையையும் அழைத்துக்கொண்டு வந்தான். ஐந்நூறு பௌத்தப்பிக்குகள் போர்செய்வதற்காக அல்லர்; ஐந்தாம்படை வேலை செய்வதற்காக, குடிமக்களிடத்தில்போய் அவர்களுக்கு மதவெறியையூட்டி ஏலேல மன்னனுக்கு எதிராக அவர்களைக் கிளப்பிவிடுவது அவர்கள் வேலையாக இருந்தது. சேனைகளோடு பிக்குகளை ஐந்தாம்படை வேலைசெய்ய அழைத்துக் கொண்டதுமல்லாமல், துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகா தேவியையும் போர்க்களத்துக்கு அழைத்து வந்தான்.
போரில் வெல்லமுடியாமல் இருந்த இடங்களில் துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகாதேவியைப் பகைவனின் தளபதிக்குக் காட்டி மயக்கி வெற்றிபெற்றான். தளபதிகள் அவளை மணஞ்செய்துகொள்ளும் ஆசையினால், போரைச் சரியாகச் செய்யாமல் நழுவிவிட்டார்கள். அப்போது துட்டகமுனு எதிரிப்படைகளை வென்று வெற்றிபெற்றான். மஹேல நகரத்துக் கோட்டைமேல் போர்செய்த துட்டகமுனு அந்நகரத்தைப் போர்செய்து வெல்லமுடியாதென்று கண்டு, அக்கோட்டைத் தலைவனான மகேலன் என்னும் தமிழ்ச் சேனாதிபதிக்கு விகாரமகாதேவியைக் காட்டிச் சூதாகப்போரை வென்றான் (மகாவம்சம் 25 : 48 - 49). அம்பதித்தகக் கோட்டை மேல் போர் செய்தபோது அக்கோட்டையைத் துட்டகமுனு வெல்ல முடியவில்லை. ஆகையால், அக்கோட்டையிலிருந்த தித்தம்பனுக்கு விகாரமகாதேவியைக் காட்டி ஏய்த்துச் சூதாகப் போர் வென்றான்.
சிங்கள அரச பரம்பரை உரோகண நாட்டுப்
பாண்டியர் பரம்பரை
மஜிமகராஜன்
│
மகாநாகன் காமணி அபயன்
(தேவனாம்பிய திஸ்ஸனின் தம்பி;(மகாநாகனுக்கு
காமணி அபயனிடம்அடைக்கலந் தந்தவன்)
அடைக்கலம் புகுந்தவன்;
காமணி அபயன் காலமான பிறகு
அவனுடைய ஆட்சியைக்
கைப்பற்றிக் கொண்டான்)