494
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
நடுவில் நிறுத்தினான். நிறுத்தி அந்தப் பதுமைக்கு அருகில் கொற்றக்குடையைப் பிடிக்கச்செய்தான். அரசர்கள் போர் செய்யும்போதும் போர்க்களத்தில் கொள்ளக் குடை பிடிப்பது அக்காலத்து வழக்கம். கொற்றக்குடையின் கீழே தன்னுடைய பதுமையை நிற்கச் செய்தான். அதனைத் துட்டகமுனு என்று கருதித் தீகஜநூந்து அங்குச்சென்று அந்த அரசன்மேல் (பதுமையின் மேல்) பாய்ந்து வாளால் வீசினான். வீசின வேகத்தில் பதுமை கீழே விழுந்தபோது தீகஜாந்து அதை வெட்ட ஓங்கினான். அப்போது துட்டகமுனுவின் வீரனான சூரநிமிலன் என்பவன் அவன்மேல் பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டான் (மகாவம்சம் 25 : 55 - 64) சேனாபதி இறந்துபோகவே தமிழச்சேனை தோற்றுவிட்டது.
தன்னுடைய சேனாதிபதி போர்க்களத்தில் இறந்த செய்தியறிந்து ஏலேல மன்னன் தானே போர்க்களத்துக்குச் சென்று போர்செய்தான். தன்னுடைய பட்டத்து யானையாகிய மகா பப்பதம் (மகாபர்வதம்) என்னும் யானைமேல் அமர்ந்து ஏலேல மன்னன் போர் செய்தான். வயது முதிர்ந்த கிழவனாகிய ஏலேல மன்னனுக்கும் இளைஞனான துட்டகமுனுவுக்கும் அநுராதபுரத்தின் தெற்குவாயிலின் அருகில் குயவர் கிராமத்துக்கு அருகே போர்நடந்தது. ஏலேல மன்னன் போரில் இறந்துபோனான். துட்டகமுனு வெற்றியடைந்தான் (மகாவம்சம் 25: 69 - 70).
ஏலேல மன்னன் இறந்தது அறிந்து குடிமக்கள் துக்கம் அடைந்தனர். தெய்வம்போல் இருந்த மன்னனை அவர்கள் அன்போடு நேசித்தார்கள். போர்க்களத்தில் வீரப்போர் செய்து இறந்த ஏலேல மன்னனுக்குத் துட்டகமுனு கடைசி மரியாதை செய்தான். அரசனுடைய உடம்பை நகர மக்களின் முன்பு கொளுத்தி எஞ்சியிருந்த எலும்புச் சாம்பலின்மேல் ஏலேல மன்னனுக்கு நினைவுச்சின்னமாக ஒரு சேதிமக் கட்டடம் கட்டினான். நான்கு வகையான பெரியவர்களுக்கு நினைவுச்சின்னமாக சேதிமம் அமைக்கவேண்டும் என்று பௌத்தமத நூல்கள் கூறுகின்றன. புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், சக்கரவர்த்திகள் ஆகிய நான்கு வகையான பெரியவர்கள் இறந்துபோனால் அவர்களுக்குச் சேதிமங்கள் கட்டவேண்டும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. அந்த