66
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
அடிக்குறிப்புகள்
1. “அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும்பெறல் மரபில் கரும்பு இவண் தந்தும், நீரக விருக்கை யாழி சூட்டிய, தொன்னிலை மரபின் முன்னோர்.” (புறம் 99: 1-4). “அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன. கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே”. (புறம்.392: 19-21)
2. “நெடுமிடல் சாயக்கொடுமிடல் துமியப், பெருமுலை யானையொடு புலங்கெட இறுத்து”. (4 ஆம் பத்து, 2010-1)
3. ‘யாழிசை மறுகின் நீடூர் கிழவோன், வாய்வாள் எவ்வி ஏவல் மேவார், நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பெருந்தலர், அரிமணவாயில் உறந்தூர்’ (அகம் 2: 10-13).
4. “சுழல்தொடி அதிகன், கோளற, வறியாப், பயங்கெழு பலவின், வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன், களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்றருவி” (அகம்.162: 18-23).
5. “கறையடி யானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்சுவர பேஎய்க், கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேமமாகிய பெரும்பெயர். வெள்ளாத்தானை அதிகன் கொன்று வந்து, ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு” (அகம். 142:9-14) “கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண்பாண்டியன், வினைவல் அதிகன், களிறொடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொண்கர் ஆர்ப்பு." (குறும். 393:3-6).
6. “செருவேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரோடு முரணிச் சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோன்றிய அன்றும் பாடற்கரியை” (புறம். 99:8-11).
“இன்றும், பரணன் பாடினன் மற்கோல் மற்றுநீ. முரண்மிகு கோவலூர் நூறிநின், அரண்டு திகிரியேந்திய தோளே” (புறம். 99: 11-14).
7. “நீலமணி மிடற்று ஒருவன் போல, மன்னுகபெரும நீயே தொன்னிலை பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது. ஆதனி்ன்னதத் தடக்கிச் சாதல் நீங்க வெமக்கீத் தனையே” (புறம். 91: 5-11) “கமழ்பூஞ்சாரல் கவினியநெல்லி. அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கீந்த உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல், அரவக் கடற்றானை யதிகன்” (சிறுபான். 100-103).
8. “இழையணி யானை இரப்போர்க் கீயும், சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை, அடுபோர் ஆனா ஆதனோரி, மாரி வண்கொடை” (புறம். 153: 2-5) “வெம்போர். மழவர் பெருமகன் மாவள்ளோரி, கைவளம்". (நற். 52:8-10)
9. காரிக்குதிரை காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரியும் (சிறுபாண் 110-111).